சென்னை, 'நிருபர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி நேரில் ஆஜராக வேண்டும்' என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம் வேப்பூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினர் ராமநந்தம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் 'ஆக. 21ல் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.
போலீஸ்காரர் ஒருவரை லாரி ஏற்றி கொலை செய்யும்படி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கூறினார். இதுதொடர்பான வழக்கும் மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்து வருகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.07.2019