தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை: மத்திய நிதியமைச்சர்


சென்னை, ஜூலை 20- தமிழ்நாட்டில் தொழில் முனை வோர் சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக நகரத்தார் வர்த்தக சபை 2 ஆண்டுகளுக்கு ஒரு  முறை நடத்தும் 4வது சர்வதேச வர்த்தக மாநாடு சென்னையில் சனிக்கிழமையன்று (ஜூலை 20)  துவங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாநாட்டை துவக்கி வைத்துப்பேசுகையில்,  தொழில் முனைவோர்களை உரு வாக்கவும், தொழில்களை பெருக்கிட வும் தேவையான நடவடிக்கை களை மத்திய அரசு எடுக்கும்  என்றார். கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறை யின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்றார் அவர்.  வர்த்தகத்தின் வாயிலாக மற்ற நாடுகளில் தமிழ்கலாச்சாரம் பரவியதற்கு நகரத்தாரின் பங்கு அளப்பரியது. இதற்கு உதாரணமாக வியட்நாம், கம்போடியா, பர்மா போன்ற நாடுகளை குறிப்பிடலாம். இந்நாடுகளில் அவர்களது வரலாற்று சின்னங்கள் தமிழில் இன்னமும் உள்ளன. திரைகடல்  ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு உதாரணமாக நகரத்தார் விளங்கினர் என்றார் அமைச்சர். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற வணிகத் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்று மாநாட்டு அமைப்புகுழு தலைவர் இஎம்சி பழனியப்பன் கூறினார்.