இதுதான் மஹா..பாரத கதை - பாகம் 1
"எது நடந்துச்சோ அது நல்லா நடந்துச்சு.. நடத்திட்டானுக..
எது நடந்துட்டு ரன்னிங்ல இருக்கோ அது நல்லாவே மக்கள
வச்சி செய்யுற மாதிரி நடந்துட்டு இருக்கு..
எது நடக்க போதோ அதுவும் நல்லா பேஸா நடக்கும்..
நடத்துவாங்க.. நடத்தி ஒரே அடியா சோலிய முடிச்சிருவாங்க ங்கிற பகாவன் ஸ்ரீ கிருஷ்ண ஸ்லோகத்த சொல்லியும், "உ"னா அதுக்கு கீழ படுக்கவாக்கில ரெண்டு கோடு அதுக்கு கீழ ஒரு புள்ளி னு புள்ளிவச்சி, புள்ளாயார் சுழி போட்டு தொடங்குவோம். புள்ளி வைக்கிறேனு சொன்னதும் யாரும் காமண்ட் பாக்ஸ்ல கண்ட வீடியோவ தூக்கிட்டு வந்து போட்டுற வேண்டாம். இது மங்களகரமா ஆரம்பிக்கிறதுக்காக சொல்றது.
எது நடந்துட்டு ரன்னிங்ல இருக்கோ அது நல்லாவே மக்கள
வச்சி செய்யுற மாதிரி நடந்துட்டு இருக்கு..
எது நடக்க போதோ அதுவும் நல்லா பேஸா நடக்கும்..
நடத்துவாங்க.. நடத்தி ஒரே அடியா சோலிய முடிச்சிருவாங்க ங்கிற பகாவன் ஸ்ரீ கிருஷ்ண ஸ்லோகத்த சொல்லியும், "உ"னா அதுக்கு கீழ படுக்கவாக்கில ரெண்டு கோடு அதுக்கு கீழ ஒரு புள்ளி னு புள்ளிவச்சி, புள்ளாயார் சுழி போட்டு தொடங்குவோம். புள்ளி வைக்கிறேனு சொன்னதும் யாரும் காமண்ட் பாக்ஸ்ல கண்ட வீடியோவ தூக்கிட்டு வந்து போட்டுற வேண்டாம். இது மங்களகரமா ஆரம்பிக்கிறதுக்காக சொல்றது.
பராசர மகரிஷியின் பையானான வேத வியாசர், எப்படியாவது மனுச பயபுள்ளைக வாழ்ற இந்த பூலோகத்துக்கு மஹாபாரத கதையை எழுதி பரப்பனமுன்னு பிரமன வேண்டிருக்கான்.
கல்வி கடவுள் சரசுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருந்த பிரம்மன் "யார்ரா.. இந்த நேரத்துல"னு வியாசர்க்கு "டொய்ங்"னு காட்சி தந்து "என்னப்பா உனக்கு பிரச்னை..?"னு கேக்க, "மகாபாரத ஸ்டோரிய நீங்க தான் எழுதனும்"னு சொல்லியிருக்கான் வியாச முனிவன். "மஹாபாரதத்த எழுத உன்னால முடியாது, அது பெரிய ஸ்டோரி.. ரெம்ப கேரக்டர்ஸ் இருக்கும், அப்ப அமெரிக்கன் மாப்பிளை போல கண்ணன் வந்துபோவான்.. அத எழுதுற அளவுக்கு ஆளும், கோலும் விநாயகன்கிட்ட தான் இருக்கு அவனை புடுச்சி எழுதிக்கோ"னு சொல்லிடாப்புல..
உடனே வியாசர்.. சத்தி, சித்தி கூட சுகமா இருந்துட்டு இருந்த விநாயகரை தன்னோட தவத்தால டிஸ்டருப் பண்ணிருக்கான்.
"இந்த நேரத்துல எவண்டா கதவ தட்டுனதுன்னு கதவ தொறந்த விநாயகன் வியாசர்க்கு காட்சி தந்திருக்காப்பில.
காட்சி தந்த விநாயகன் "என்ன விஷயம்ப்பா..? எதுனாலும் வேமா சொல்லிட்டு கெளம்பு, எனக்கு பல சோலி இருக்கு" னு சொல்ல, அதுக்கு வியாசன் "மஹாபாரத்த எழுதுற கெப்பாசிட்டி உங்களுக்கு தான் இருக்குனும், அத எழுதக்கூடிய கோலும் நீங்க தான் வச்சிருக்குறாதா பகவான் பிரமன் சொன்னாப்ல, அதனால எனக்கு அதை கதையா எழுதி கொடுக்க நீங்கதான் உதவனும்"னு சொல்ல..,
வியாசர் சொன்னதும் "சரி சரி.. நான் எழுத ஆரம்பிச்சா என்னோட கோலு நிக்காது அதனால நீ சொல்லிட்டே இரு, நான் எழுத்திட்டே இருக்கேன்"னு விநாயகன் சொல்ல, உடனே எழுத தேவையான ஐயிட்டத்த எடுத்துவச்சி, ஆளுக்கு எதுக்க எதுக்க உக்காந்து எழுதியிருக்கானுக. இப்படி எழுதி முடிக்கப்பட்டது தான் மஹாபாரதம்.
எழுதி முடிச்சதும் அந்த மகாபாரத கதைய தன்னோட மகன் சுகப்பிரம்ம ரிஷிக்கு சொல்லிருக்கான் வியாசர்.
வியாசரோட மகன் கந்தவர்களுக்கும், ராட்சசதர்களுக்கும் சொல்லிருக்கான்.
தேவர்களுக்கு நாரதர் சொல்லிருக்கான். இந்த நாரத பயலுக்கு எவன் சொன்னனு தெரியல.
கடைசியா மனிதகுலத்துக்கு வியாசரோட சிசியப்புள்ள வைசம்பாயனர் சொல்லிருக்கான். இப்பிடி ஒவ்வொருதனுக்கா ஒவ்வொரு பயக சொல்ல.., அடுத்து பத்தொம்பது, இருபதாம் நூறாண்டுல வெளிநாட்டு லாங்வேஜ்ல எல்லாம் ஆப்செட் பிரின்ட் போட்டு சொல்லிருக்காங்க. மகாபாரதம், வியாசர் விருந்து னு தமிழ்ல நிறையா சொல்லியிருந்தாலும் தெளிவா புரியுற மாதிரி இந்த 21ஆம் நூற்றாண்டுல இந்த மஹாபாரத கதைய தெரிஞ்சவங்க, தெரியாதவங்களுக்கு நான் சொல்ல இருக்கேன்.
sunday ஆனதும் ஒருபக்கம் பைபிள தூக்கிட்டு ஓடுறானுக, ஒரு குரூப்பு யாருக்குடா நெத்தில பெரிய தழுப்பா இருக்குனு போட்டி போடுரானுக. அதனால இந்து மக்களே, நீங்களும் உங்க நீதி நூலை பத்தி தெரிஞ்சிக்கோங்க.
உண்மையிலயே உங்களுக்கு சிந்திக்கிற திறம இருந்துச்சினா, படிச்சிட்டு கேள்வி கேளுங்க. அதோடு நிக்காம நாளு பேருக்கு இது அப்பட்டியிருக்கு.., அது இப்படி இருக்குனு பரப்புங்க. கோவப்பட்டு திட்டிரமட்டும் கூடாது. அப்றம் பிளாக் பண்ணிடுவேன்.
படிச்சி முடிஞ்சதும், இன்னடா இது இவ்வளவு கேவலங்கெட்ட தனமா இருக்கு னு இத தூக்கி சுமக்குர காவி சங்கிகள தூக்கிப்போட்டு மிதிச்சாலும் சரி, இல்ல.., கடவுள் ங்கிற ஒன்னே இல்லடா னு மத்த ரெண்டு பக்கிகளை கூப்பிட்டு புத்திமதி சொன்னாலும் சரி. ரெண்டும் வரவேற்கதக்கது தான்.
வாங்க தொடர தொடரலாம்...
கருத்துரையிடுக