2009ம் ஆண்டு என்பது தமிழர்களின் வாழ்வில் எப்பேர்பட்ட ஓர் துன்பியல் நிகழ்வை பதிவு செய்து சென்றது என இவ்வுலகு அறியும்,
அதே காலகட்டத்தில் அரும்பு மீசையும், காதலும் காமமும் பொங்கும் எண்ணங்கள்
மனதில் திளைக்கும் காலமது எனக்கு,
மனதில் திளைக்கும் காலமது எனக்கு,
வீட்டிற்கு அப்பா வாங்கி வரும் வார இதழ்கள் மூலமாகவே ஈழம், விடுதலைபுலிகள், பிரபாகரன் , ஆன்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன், போன்ற பெயர்கள் ஓரளவுக்கு எனக்கு அறிமுகம் ஆகியிருந்தன
2008-09 காலகட்டத்தில் தினசரி செய்திதாள்களில் வரும் ஈழத்து போரின் புகைப்படங்கள் மனித ஓலங்களின் அவலத்தை என் நெஞ்சில் ஓர் ஆற்றாமையை உருவாக்கியது ,
இதேவேளையில் விடுதலைபுலிகளை பற்றி தேடி படித்தபோது நம் தமிழ் இனத்தின் நிகழ்கால புறநானுற்று வீரர்களாக என்னுள் வந்து சேர்ந்தனர்
தன் மக்களுக்காகவும் தன் உரிமை, விடுதலை வேட்கைக்கும் உருவானவர்களே விடுதலைபுலிகள் என்ற சிந்தனையே எனக்கு தீர்க்கமான முடிவானது
2008ன் பிற்பாதியில் இருந்தே ஈழத்தில் இருந்து வந்த செய்திகள் என் ஆற்றாமையை மன உளைச்சலாக மாறிப்போனது
மகனின் முன்பே தாய் கற்பழிப்பு, தமிழரின் ஆசானவாயில் இராணுவ தடியை ஏற்றி கொடுமைபடுத்தியது,
தமிழ் பெண்கள் மீது நடந்த சொல்லமுடியாத இன்னல்களை படிக்கும் போது கையறு நிலையில் அழுகையுடன் திரிந்த காலமது...
தமிழ் பெண்கள் மீது நடந்த சொல்லமுடியாத இன்னல்களை படிக்கும் போது கையறு நிலையில் அழுகையுடன் திரிந்த காலமது...
தினசரி நாளிதழில் வரும், தாயின் வயிற்றில் இருந்து வெளியே தெரியும் குழந்தையின் கை புகைபடம், சிங்கள இராணுவ சில்லடியில் சிதைந்த தமிழர்களின் முகங்கள், வண்டிகளில் தமிழர்களை பிணக்குவியலாய் ஏற்றி செல்லும் காட்சி, தமிழ் பிள்ளைகள் கதறும் காணொளிகள், இதன் உச்சகட்டமாய் எம் தமிழனின் இதயத்தை சிங்கள காடையர்கள் உயிரோடு அறுத்தெடுக்கும் காட்சி என்னை மன உளைச்சலுக்கே தள்ளியது..
எங்கள் கோபத்தை ஒன்றிணைத்த நிகழ்வாய் சனவரி 29, 2009 அன்று சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்தில் போரை நிறுத்த சொல்லி உடலில் தீ வைத்து இறந்து போனார் என்ற செய்தியே எங்களை ஒருபுள்ளியில் இணைக் க செய்தது
ஆனால் எங்கள் கோபத்தை மடைமாற்றும் வேலையை அப்போதைய திமுக காங்கிரஸ் அரசு கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுப்பு கொடுத்து மாணவர்களின் எழுச்சியை நீர்த்து போக செய்தது
இதிலிருந்தே அப்போதைய திமுக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வேலையை தொடங்கியது,
இந்திய பார்ப்பன அரசு இலங்கை சிங்கள அரசுக்கு உதவி செய்து தமிழர்களுக்கு துரோகம் செய்தது
மே17,18,19 ஆகிய மூன்று தினங்களில் 1,70000 தமிழ் இரத்த சொந்தங்கள், எங்கள் கண் முன்னே கொல்லப்பட்டனர்
சில ஆண்டுகள் கழித்து பாலசந்திரன் சுட்டு கொல்லப்பட்ட புகைபடமும் இசைப்பிரியா அக்காவின் புகைப்படமும் எங்களை மீண்டும் உறக்கமற்று திரிய செய்தது
பதினொரு ஆண்டுகள் ஓடி விட்டது ஈழமும் ஓர் நிலைக்கு மாறி விட்டது, இந்திய ஒன்றியமும் பல விசித்திரங்களை பார்த்துவிட்டது, இதில் தமிழ்நாடு பல அரசியல் கோமாளிதனங்களையும் கடந்து வந்து விட்டது
இங்கே முத்துகுமார் என்ற போரளி எங்களை போன்றோருக்கு விட்டு சென்ற செய்தி " தமிழ் இளஞர்களே அறிவாயுதம் எந்துங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எம்மை இதோ இந்த தருணம் வரை நகர்த்தி வந்துள்ளது
ஆனால் காலம் எங்களுக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது ஈழம் என்பது காற்றோடு கரைந்து போகும் விடயம் அல்ல, அது எங்கள் மூச்சோடு கலந்து உயிரோடு உயிர்ப்பாய் இருக்கும் இரத்த ஓட்டம் அது
தமிழீழம் எங்கள் காலத்தில் கைகூடாமல் போகலாம், ஆனால் எங்களின் விடுதலை வேட்கையை கண்டிப்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்வோம்
எங்களின் காவல் நாட்டார் தெய்வங்களான விடுதலைபுலிகள் மீது சத்தியம் செய்து முடிக்கிறேன்
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்.....
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்.....
வெல்லும் தமிழீழம் ஓர் நாளில் என்ற ஒற்றை முழக்கத்தோடு

கருத்துரையிடுக