வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றம்

இந்தியா முழுவதும் இந்திய மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் ஜவுளி நிறுவனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிகள் விற்பனை நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் என உற்பத்தி சார்ந்தும் விற்பனை சார்ந்தும் இருக்கக்கூடிய
பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லக்கூடிய 8 மணி நேரம் வேலை என்ற சட்ட நடைமுறையை பின்பற்றாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை அப்பட்டமாக இயக்குனர் வசந்தபாலன் அங்காடி தெரு என்ற சினிமா மூலம் படம் பிடித்துக் காட்டினார்.
Image may contain: one or more people and outdoor
தனியார் நிறுவனங்களை நோக்கி நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரத்தின் கீழ் இயங்கக்கூடிய அதிகாரிகள் தனியார் நிறுவனங்களிடம் 12 மணி நேரம் அல்ல எத்தனை மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டாலும் அந்த நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். உதாரணமாக நான் பணிபுரிந்த ஒரு தனியார் நிறுவனத்தை நோக்கி ஆய்வுக்காக வந்த தொழிலாளர் நலவாரியத்தின் ஆய்வாளர் என்னிடம் இந்த நிறுவனத்தின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு சென்றார் ஆனால் அதன்பின் அவர் வரவே இல்லை காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சித்தபோது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்த ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்டி விட்டார். அதன் பின்னர் அந்த நிறுவனத்திலிருந்து நான் வெளியேறி விட்டேன்.
தனியார்மய தாராளமய கொள்கையில் தீவிரமாக இருக்கக்கூடிய மத்திய அரசின் இந்த திட்டம் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்திய பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டலை இன்னும் வலுவாக்கிடும் பொருட்டு சாதகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதோடு தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் மத்திய அரசிற்கு வன்மையான கண்டனங்கள்.
முருகன்
ஒருங்கிணைப்பாளர்
நவபோதி பண்பாட்டு மையம்.