சிறுமி ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது - தோழர் திருமுருகன் காந்தி
சிறுமி ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது. குழந்தைகள்-பெண்கள் மீதான வன்முறை அதிமுக அரசினால் தண்டிக்கப்படுவதோ, கண்டிக்கப்படுவதோ இல்லை ஜெயஸ்ரீ கொலைபோல 2018அக்டோபரில் சேலத்தில் சிறுமி ராஜேஸ்வரியை கழுத்தறுத்து கொலை, 2018ல் செப்டம்பரில் தேனி அல்லிநகரத்தில் 12வயது சிறுமி ராகவி படுகொலை, 2018 மார்ச் மாதத்தில் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி படுகொலை, 2020 மார்ச்சில் பூந்தமல்லியில் 10 வயதுச் சிறுமி பாலியலாக படுகொலை, 2020 சனவரியில் விருதுநகரில் 8 வயது சிறுமி பாலியலாகப் படுகொலை, 2014ல் சேலம் வாழப்பாடியில் 10 வயது.சிறுமி பூங்கொடி படுகொலை என சிறுமிகள் அதிமுகவின் செயலற்றத் தன்மையால் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது.
சேலம் ராஜேஸ்வரியின் கொடூரக்கொலையை கண்டித்து, கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பேசியதற்காக பிணையில் வர இயலாத பிரிவில் என் மீது வழக்கை அதிமுக அரசு ஏவியது என்பதே இந்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தும்
Comrade ThiruMurugan Gandhi's Twitter Post
கருத்துரையிடுக