#வலுக்கும்_தமிழக_பெண்களின்_டாஸ்மாக்_எதிர்ப்பு


"குடி குடியைக் கெடுக்கும்"
"குடிப்பழக்கம் உயிரைக் கொல்லும்"
சாராயம் குடிப்பதனால் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நோய்கள் வரும் என்று தெரிந்தே அரசாங்கம் விற்கிறது.

#மரண_வியாபாரி_ஜெயலலிதா ஆட்சியில் ,இதனைக் கண்டித்து தமிழக பெண்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சாராய கடைகள் மூடப்பட்டு,பின் மெதுமெதுவாக கடைகள் திறக்கப்பட்டது.




கரோனா என்னும் பெருந்தொற்று பரவும் இந்த அபாயகரமான சூழலில் மதுபானக் கடைகளை கரோனா கூடாரமாக மாற்ற முயல்கிறது மூளையில்லாத (எடுபிடி) எடப்பாடி பழனிச்சாமி அரசு .144 தடை உத்தரவு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது என்ற பொதுநல வழக்கு ( PIL - PUBLIC INTEREST LITIGATION ) தொடரப்பட்டதற்கு அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விசயம் என கூறிவிட்டு முரணாக சமூக இடைவெளி ,முக்க்கவசம் ,குடையுடன் வருதல், ஆதார் மற்றும் ஒரு கடைக்கு இரு காவலர்கள் என சில நிபந்தனைகளை முன்வைத்தது.
மக்களின் நலன் மற்றும் பாதிப்புகள் என எதையும் பொருட்படுத்தாமல் தனது பொறுப்புணர்வை அறவே மறந்து ,கொள்ளை நோய் காலத்திலும் அரசின் ஊதுகுழலாகவே செயல்பட்டது #உயர்நீதிமன்றம்

ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு மே7 அன்று டாஸ்மாக் கடைகளை திறந்தது .முதல் நாளே தடை உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதிலும் பெண்களின் தலைமையில் போராட்டம் வலுத்தது .
ஒருசில இடங்களில் பெண்களின் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டது.

மதுரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பெண்கள் எழுச்சி இயக்க தோழர்களும்,ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க தோழர்களும் கலந்து கொண்டனர்.பின் காவல்துறையால் கைது செய்யப்படு,அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட்டது .

அலங்காநல்லூரில் குடித்து விட்டு வந்த கணவனால் கவலையுற்ற மனைவி ,மகள் இருவரும் தீக்குளித்தனர்.
குடிகாரர்களால் (மது பிரியர்கள் ) ஒட்டுமொத்த தமிழகமுமே ஒரு அசாதாரணமான சூழலை சந்தித்தது.

இரண்டாவது நாளும் எந்தவித பின்வாங்கலும் இல்லாமல் பெண்களின் தலைமையில் சாராய எதிர்ப்பு போராட்டம் வலுத்தது.

இந்த சூழலில் மானங்கெட்ட எடப்பாடி அரசு மதுப்பிரியர்களுக்கு ஆதார் கார்டு என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டுமென மேல்முறையீடு செய்தது.
அதே சூழலில் #திடீரென உயர்நீதிமன்றம் மதுக்கடைகளில் சில்லரை விற்பனை செய்ய தடை என்று அறிவித்தது.யார் மறுத்தாலும் இது ஒட்டுமொத்த தமிழக பெண்களின் போராட்டத்தினால் கிடைத்த வெற்றி தான் .
எங்கே போராட்டம் வலுத்து இனி அரசு மதுக்கடைகளே நடத்த முடியாத சூழல் உருவாகிவிடுமோ என பயந்தே இந்த தற்காலிக அறிவிப்பை அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
இதனையும் எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

மதுக்கடைகளை திறக்க காட்டும் ஆர்வத்தை பார்கையில் இதில் ஜெயலலிதாவையே மிஞ்சிவிட்டார் எடப்பாடி என்றே தோன்றுகிறது.

தமிழகம் முழுவதும் உழைக்கும் பெண்களின் இந்த சாராய எதிர்ப்பு போராட்டம் என்னும் தீப்பொறியை தமிழகம் முழுவதும் பற்றிப் படர செய்ய வேண்டும் .ஒட்டுமொத்த மக்களின் மத்தியிலும் சாராய எதிர்ப்பு அலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் இருக்கும் முற்போக்கு இயக்கங்களின்
#பூரண_மதுவிலக்கை_அமல்படுத்த_வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் மத்தியில் ஆணித்தரமாக கொண்டு செல்ல வேண்டும் .
குறிப்பாக தமிழகத்திலுள்ள பெண்கள் அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும்.
கொரோனா காலத்தில் நாம் ஒன்று கூடுவதில் சிக்கல் இருந்தாலும் வேறு எந்தெந்த வழிகளில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தாலும்,
மக்களின் மத்தியில் பூரண மதுவிலக்கிற்கான அரசியலை கொண்டு சேர்க்கலாம் என்பதையும் சிந்திப்போம் .சாராயத்திற்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் தமிழகத்தை காப்போம் .

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சித்தாந்தம்,கொள்கைகள் இருந்தாலும் பூரண மதுவிலக்கு என்ற விடயத்தில் அனைவரும் ஓரணியே.
தமிழகம் முழுவதிலும் பூரண மதுவிலக்கிற்கான ஓர் கூட்டமைப்பை உருவாக்கி மக்களின் ,குறிப்பாக பெண்களின் போராட்ட உணர்வை தட்டியெழுப்புவோம் .

அதற்கான முன்முயற்சிகளை தொடர்ந்து எடுப்பதற்கான வேலைகளை செய்ய #பெண்கள்_எழுச்சி_இயக்கம் முற்போக்கு இயக்கங்கள்,சனநாயக சக்திகள்,மாணவர்கள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கிறது.
"ஒன்றிணைவோம் - கூட்டாய் செயல்படுவோம்.”
பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்.

#பூட்டியகடைகள்_பூட்டியது_தான்_இனி_அரசாங்கம்_அதனை_திறக்கக்_கூடாது.

இப்படிக்கு

பெண்கள் எழுச்சி இயக்கம் தமிழ்நாடு

FaceBook Post - https://www.facebook.com/chinna.dinesh.94/posts/2878326742274976