#பார்ப்பனன்_ஷங்கரின்_பகல்வேஷம்

ஷங்கர் தனது படங்களில் பேசும் சமூக விழிப்புணர்வுகள் நாம் அறிந்ததே...
இட ஒதுக்கீட்டால் #மாவட்டத்தில்_முதல்மதிப்பெண் பெற்ற ஐயராத்து மாணவனுக்கு டாக்டர் சீட் கிடைக்காம, மினிஸ்டர் கேக்குற பணத்தையும் தரமுடியாம, தற்கொலை பண்ணிக்கறதைலாம், நான் ஸ்கூல் படிக்கறச்சே ஜென்டில்மேன் படத்துல பாத்து கண்ணுல ஜலம் வச்சிண்டு அழுததெல்லாம் இப்ப நெனச்சாலும் தொண்டைய அடைக்கறது...
அதேபோல், தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள்லயே ராஜாஜிதான் சூப்பர் முதல்வர்ங்கறதை தமிழர்களுக்கு முதல்வன் படத்தில் அவர் புரிய வச்ச விதம், இப்பவும் புல்லரிக்க வைக்கு...
போலவே, நாட்ல எல்லாருமே அயோக்கியன்ஸ், அவாள் மட்டுமே லஞ்சம் வாங்காத, தன்னொழுக்கம் மிக்க புனிதர்கள்ங்கறதை இந்தியன் படத்தில் ஆர்டிஓ ஆபிஸில் லஞ்சம் வாங்காத ஒரே ஆள் அந்த மாமிதான்னு சொல்றதுலயும், அந்நியன் படத்துல சுய ஒழுக்கமும், நேர்மையும், நீதியும், சமூக அக்கறையும் கொண்ட ஒரே ஆள் நம்ம அம்பி மட்டுந்தாங்கறதுலையும் மிகச்சிறப்பா நமக்கு புரிய வச்சிருப்பாப்ல...
நிற்க,
நாம இங்க பாக்கப்போற விஷயம் ஷங்கரின் படங்கள் பேசும் பாப்பானியம் பற்றியதல்ல, அவர் படங்கள் பேசும் அரசியல் பற்றியது...
ஊழலில் திளைத்த ஜெயா ஆட்சியின் (1991-96) இறுதியில் வந்த ஷங்கரின் இந்தியன் படத்தில், நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இடைநிலை அரசு அதிகாரிகளே என்று காட்டியிருப்பார்கள்...
தப்பித்தவறிக்கூட அமைச்சர்களைப் பற்றியோ, முதல்வரைப் பற்றியோ ஒரு சிறு காட்சியோ, குறிப்போ கூட இருக்காது...
செம்மல்ல...
சரி, அடுத்து திமுக கலைஞர் ஆட்சி. (1996-2001)...
இப்ப ஷங்கர் எடுத்த படம் முதல்வன்...
முதல்வன்னு பேரு வச்சுட்டு முதல்வரைக் குறைசொல்லலன்னா எப்டி...
இந்தத் தடவை அதிகாரிகளை விட அரசும் ஊழல் அமைச்சர்களும், குறிப்பா முதல்வரே எல்லாத் தவறையும் நேரடியாகச் செய்கிறார்...
அதுலயும் அந்த முதல்வர், அடுக்கு மொழி பேசுபவராகவும், தமிழ் புலமை கொண்டவராகவும் காட்டப்பட்டிருப்பார்...
எப்பூடி, நம்ம ஷங்கரின் க்ரியேட்டிவிடி...
அடுத்து மறுபடி 2001-2006 ஜெயா ஆட்சி...
அம்மா ஆட்சினாவே, சமூகத்தில் லஞ்சம், லாவண்யம், ஊழல், எதுவுமே இல்லாத சுபிட்ச ஆட்சி தானே...
இருந்தாலும் சமூகத்தை திருத்தனும்ல, பசங்களை பெற்றோர்கள் புரிஞ்சிக்கோனும் ங்கற கருத்தை வலியுறுத்தி பாய்ஸ் படம் (2003) வந்தது...
அப்றம் 2005ல அந்நியன்...
இதுல சமூக அவலங்களுக்கான மொத்த காரணமும் மக்கள்தான்னு பழியைப் போடுவார். தனிமனித ஒழுக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்பார்...
இந்த முறையும் மறந்தாப்லக்கூட முதல்வரையோ, அமைச்சர்களையோ, அரசியல் வாதிகளையோ தொடக்கூட இல்லை. ஏன்னா, நடக்கறது தந்கத்தாரகையில் பொற்கால ஆட்சியாச்சே...
அடுத்து (2006 - 2011) மறுபடி கலைஞர் ஆட்சி. இப்போது நம்ம சமூக சீர்திருத்த சித்தாந்தி ஷங்கர் எடுத்த படம் சிவாஜி (2008)....
அமெரிக்க வரவு NRI ஒருவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வந்தால், இங்கே எதுவுமே சரியில்லை. அரசு அதிகாரிகளுக்கு 4,5 கோடிகள், அமைச்சர்களுக்கு 40, 50 கோடிகள்னு லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே ஆகிறது...
அதாவது, ஆட்சியில இருக்கும் அம்புட்டு பயலுவலும் பக்கா பிராடுங்க, ஊழல் வாதிங்கங்கறா மாதிரியான நேரடி தாக்குதல்... எப்பூடி நம்ம சீர்திருத்தம்...
ஆக திமுக- கலைஞர் ஆட்சி நடக்கும்போது வரும் படங்களின் மெயின் வில்லன்களே அமைச்சர்களும், முதல்வரும் தான்...
அதாவது கலைஞர் ஆட்சியில் நாட்டின் சிக்கல்களுக்குக் காரணம் அமைச்சர்களும் முதல்வரும்தான்....
அதுவே ஆயா ஆட்சி என்றால்,
அமைச்சர்களையும், முதல்வரையும் ஒப்புக்குக்கூட கண்டுக்கறதில்லை. இடைநிலை அரசு அதிகாரிகளும், பொது மக்களுமே குற்றவாளிகள்...
இப்ப நம்ம இணைய நடுவால நக்கிகள் நடுநிலை ங்கற பேர்ல உருட்டற உருட்டை விட, தெறி நடுநிலை உருட்டுல இது...
சரி, 2011க்கு பிறகு அம்மா ஆட்சி வந்துடுத்தே, அதுக்கப்புறம் இதே போல வீரியமான, சமூக அக்கறை மிகுந்த படங்களை எடுத்தாரானு பாத்தா,
2011 லேருந்து ஆயா இறக்கும் வரை எடுத்த படங்களில்,
ரெண்டு ரோபோ கதைகள், ஒரு பழிவாங்கல் கதை(ஐ), ஒரு ரீமேக் படம் (நண்பன்) அதுவும் மேலோட்டமான கல்விமுறை பற்றிய கதை...
ஒரு பேச்சுக்குக்கூட ஆயா ஆட்சியைப் பற்றி குறை கூறியதில்லை...
ஆக, யார் ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள், யாரை எதிர்க்கவேண்டும், யாரை வில்லனாக முன்னிறுத்த வேண்டும் என்ற அஜெண்டாவின் படி செயல்பட்ட ஒரு காஸ்ட்லி மாரிதாஸ், மதன் வகையறா சங்கியே நம்ம ஷங்கர் ஜி...
பின் குறிப்பு :
சோசியல் மீடியாக்கள் மட்டும் வராம போயிருந்தா, நம்ம சூப்பர் சங்கி ஷங்கரைலாம் இன்னமும் நாம சமூக அக்கறை கொண்ட, சீர்திருத்த, முற்போக்கு சித்தாந்தவாதினே நம்பிட்டு இருந்திருப்போம்ல...
தளபதி மோகன்.