படையப்பா படமும் தமிழ் சினிமாவும்

படத்தின் ஹூரோ ஒரு மக்களுக்கானவராக வலம்வருகிறார் ரஜினிகாந்த்....
அழகும், அறிவும் நிறைந்த ஆணையோ, பெண்ணையோ விரும்புவது இயல்பு....
அந்த அடிப்படையில்தான் நீலாம்பரி, ரஜினியை காதலித்தார்.... ஸ்டைல், வீரம், விவேகம் என ஐந்துமுகத்தையும் சுட்டிகாட்டிதான் காதலைக்கூட சொல்வார்.....
ஆனால் ரஜினியோ சௌந்தர்யாவை காதலித்தார்.... அதற்காக சில கடிதங்களையும் தயார் செய்தார்....
பிரச்சனை இதுவல்ல.... ரஜினிக்கு எப்படி காதலிக்க உரிமை இருக்கிறதோ... அதே உரிமை நீலாம்பரிக்கும் இருக்கிறது....
தனது அணுகுமுறையில் சிக்கல் இருந்தாலும் நீலாம்பரியின் நோக்கம் ரஜினியை மனசார நேசிப்பதாய் மட்டுமே இருந்தது....
பல்வேறு கருத்துகள் நிலவும் சமுதாயத்தில் தவறான கண்ணோட்டத்தில் இருப்பது மனிதஇயல்பு.....
ஆனால் தன்னை பொறுப்புள்ளவராக காட்டிக்கொள்ளும் ரஜினிக்கோ நீலாம்பரிக்கு விளக்கம் அளிக்கவேண்டிய கடமை உள்ளது....
அதை விட்டுட்டு நீலாம்பரியை மனரீதியாக காயப்படுத்தினார்....
செளந்தர்யா ரஜினியின் காதல் நேர்மையானது அதில் எந்த சந்தேகமும் இல்லை..... ஆனால் இன்னொருவரின் காதலை கேவலப்படுத்தி வருவதை அனுமதிக்க முடியாது.....
நீலாம்பரி பாசிஸ்ட்டாக இருந்தாலும் ரஜினிக்காக மாற்றிக்கொள்ள தயாராகவே இருந்தார்... ரஜினி இதை கவனத்தில் கொள்ளவில்லை....
இறுதியில் தன்னைத்தானே அழித்துக்கொண்ட நீலாம்பரி, கடைசிவரை காதலுக்கு உண்மையாய் இருந்தார் என்பது மட்டும் உண்மை....
எனவே இதன்மூலம்.... யார் யாரை வேணும்மென்றாலும் விரும்புங்கள்! தன்னை விரும்பியவர்களின் நிலையையும் சற்று சிந்தியுங்கள்! பிடிக்கவில்லை என்றால் விளக்கமளியுங்கள்....
ஆண்களால் பல பெண் நீலாம்பரியும்,
பெண்களால் பல ஆண் நீலாம்பரியும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.....