தி.மு.க உ.பி களுக்கு மட்டும் யஷ்வந்த் யாஷின் சிறிய கட்டுரை

தமிழகத்துல மட்டும் அல்ல...ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒரு வியாதி இருக்கு...ஒரு கட்சியின் செயல்பாடுகளையோ தலைவரின் கேடுகெட்ட செயல்களையோ விமர்சித்தால்...விமர்சனம் செய்பவரின் ஜாதகத்தை தோண்டி எடுத்து செய்த விமர்சனத்துக்கு பதில் கூறாமல் எதிர் விமர்சனம் செய்வது. இதற்கு எந்த கட்சிக்காரனும் விதிவிலக்கல்ல.
நரேன் ராஜகோபாலன்னு ஒரு பதிவர். திராவிட சிந்தனையாளர். சங்கிகளின் சிம்மசொப்பனம். பல பதிவுகளில் பொருளாதார ரீதியாக இந்தியாவின் இழிநிலையை ஆதாரத்துடன் எழுதுபவர். தி.மு.க அனுதாபி.
திமுகவின் வாரிசு அரசியலை எழுதியதற்காக அவரை கேரக்டர் அசாசின் செய்து அவரின் ஜாதியின் பின்புலங்களை ஆராய தொடங்கி உள்ளார்கள் உபிக்கள். அவர் பார்ப்பனர் என்பதால் உபிக்கள் இன்னும் உக்கிரமாக களமாடுகிறார்கள்.
நானும் ஒரு காலத்தில் தி.மு.கவின் அனுதாபியாக இருந்துள்ளேன். காரணம் பகுத்தறிவு பாசறை என்ற ஒரு எண்ணம். ஆனால் அந்த எண்ணம் கலைஞர் மஞ்சத்துண்டு போடத்தொடங்கியதில் இருந்து புஸ்வாணமாகிப்போனது.😜😜😜 ராமதாஸ் கதைய தூக்கிகிட்டு வரவேணாம்...கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு ...
என்றைக்கு கலைஞர் தனது மகனுக்காக வைக்கோவை கொலை பழி சுமத்தி வெளிவேற்றினாரோ அன்றைக்கே இவர்களின் திராவிட சித்தாந்தம் தவிடுபொடியாகிவிட்டது.
அதன் பிறகு கலைஞர் குடும்ப வாரிசுகள் தயாநிதிமாறன்...கனிமொழி...உதயநிதி போன்றோர் கட்சியில் கோலோட்ச வசதியாக பலர் பலிகடாவாக்கப்பட்டனர்.
சமீபத்திய பலிகடா வெள்ளகோயில் சாமிநாதன்... இப்படி கட்சிக்காக உழைத்த பலர் வாரிசு அரசியலுக்காக பலியாக்கப்பட்டனர். இதற்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. சசிகலாவின் உறவுகளுக்காக பலியிடப்பட்டோர் ஏராளம்.
ஒரு வேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலோ...அல்லது எடப்பாடி மோடியின் கைப்பாவையாக இல்லாமல் தமிழக நலனுக்காக ஆட்சி புரிந்து இருந்தாலோ...கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம். 2014 இல் மக்கள் காங்கிரஸ் மீது இருந்த வெறுப்புணர்வு காரணமாகத்தான் பா.ஜ.கவை தேர்ந்தெடுத்தார்களே ஒழிய மற்ற காரணங்களுக்காக இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. இதேதான் தமிழகத்திலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிலும் நடந்தது. ஆனால் உபிக்கள் ஏதோ மக்கள் விரும்பிதான் ஓட்டுபோட்டதாக கனவுலகில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள்....
வாரசு அரசியல் யார் செய்யவில்லை என்று கேள்வி கேட்கலாம். எல்லாரைப்போல இருப்பதற்கு திராவிட சித்தாந்தம் எதற்கு ? அதிமுகவினரை அடிமைகள் என்று அழைத்துக்கொண்டு ...ஒட்டு மொத்த குடும்பத்திற்க்கும் அடிமையாக இருப்பதுதான் திராவிட சித்தாந்தமா ? இது உட்கட்சி பிரச்சனை என்றால் பொதுமக்களின் ஓட்டு தேவை இல்லையா ? உபிக்கள் மட்டும் ஓட்டுபோட்டு ஆட்சி அமைத்துவிடமுடியுமா ?
தமிழ்நாடு முன்புபோல் இரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக இனிமேல் இருக்கப்போவதில்லை. காரணம் ஒரு பக்கம் சாதிக்கட்சிகளும் மற்றொரு பக்கம் இனவெறியர்களும், சங்கிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுத்துவிடமுடியுமா ??
கடந்த தேர்தலில் நா.த.கவின் ஓட்டுக்களே 16 லட்சம். ஆனால் அந்த கட்சியை நாம எல்லாம் வாட்சப் குரூப்புன்னு கலாய்க்கிறோம். பொய்யும் புரட்டுமாக திரியும் சீமானுக்கே 16 லட்சம் ஓட்டு என்றால் உங்களின் போலி திராவிட சித்தாந்தம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை சீமான் இதே திராவிட சித்தாந்தத்தை வேறு கோணத்தில் கையாண்டு தமிழர் மற்றும் தமிழர் நிலம் சார்ந்த விஷயங்களை பேசி இருந்தால் விசயம் வேறுவிதமாக ஆகி இருக்கும் என்பதை மறுக்கமுடியுமா ?
ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அடிமையாக இருப்பதுதான் திமுகவின் திராவிட சித்தாந்தம் என்றால் ஸ்டாலினுக்கு பின் திமுகவில் உதயநிதி வடிவில் இன்னொரு தினகரன் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது. திமுகவும் இன்றைய அதிமுகவாக மாறும் என்பதில் துளியளவும் ஐயம் வேண்டாம்.
நரேன் ராஜகோபாலனின் பதிவில் பலர் அவரை 3% ஐயர் என்று நக்கல் செய்கின்றனர் 😜😜
பலகோடி திராவிடர்களை உறுப்பினர்களாக கொண்ட தி.மு.கவில் அடுத்த தேர்தலை சந்திக்க வியூகம் அமைக்க ஒரு திராவிடன் கிட்டாமல்தான் பீகாரி பார்ப்பானை முன்னூத்தி சொச்சம் கோடி கொடுத்து பாதபூஜை செய்து அழைத்து வந்துள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்...
அன்புடன்