இந்திய தேசிய ராணுவமும் அதன் கட்டுகதையும்
இந்திய தேசிய ராணுவம் என்ற பெயர் அடிக்கடி தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படும்.இந்திய தேசிய ராணுவம் என்றால் என்ன,அதில் இருந்தவர்கள் யார்,அவர்கள் எங்கு போரிட்டார்கள்,அதில் பணியாற்றியவர்கள் என்ன வானார்கள் என்று எதுவுமே தெரியாமல் கூட்டம் கூட்டமாக பலரும் கூச்சமே இல்லாமல் பொய்களை அவிழ்த்து விடுவது பல ஆண்டு காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது.
போர்களில் கைப்பற்றப்பட்ட வீரர்கள் போர் உபகரணங்களுக்கு சமமானவர்கள்.வீரர்களை எந்த ராணுவமும் இழக்க விரும்பாது. அலெக்ஸ்சாண்டர் முதல் இன்று வரை அதே நிலை தான்.அலெக்ஸ்சாண்டர் போரில் வென்ற நாட்டின் ராணுவ வீரர்களை தன் அணியில் சேர்த்து கொண்டு போரிட்டதாக தகவல்கள் உண்டு..எட்டடுக்கு வீரர் அணிவகுப்பில் புதிதாக சேர்ந்த வீரர்கள் முதல் அடுக்கு.அடுத்த போரில் அவர்கள் ஏழாவது அடுக்குக்கு செல்வார்கள்.அடுக்குக்கு ஏற்ப ஊதியமும் அதிகரித்து கொண்டே இருக்கும். புதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட கடைசியாக தோற்கடிக்கப்பட்ட நாட்டின் ராணுவ வீரர்கள் எட்டாவது அடுக்கில் இருப்பார்கள்.இதன் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் இருந்தாலும் கைப்பற்றப்பட்ட வீரர்களை தங்களுக்காக போரிடும் வீரர்களாக மாற்றுவது தான் பல நூற்றாண்டுகளாக நடந்து வருவது என்பது உண்மை
வெள்ளையன் ராணுவத்தில் முதலில் உருவானது மெட்ராஸ் ரெஜிமென்ட் தான்.அதில் அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் பறையர்,பள்ளி,பள்ளர்,மாலா ,மடிகா,சாணார்,பரதவர் என்று அன்று கீழ் சாதிகளாக ,பண்ணையடிமைகளாக வாழ்ந்தவர்கள் தான்.சாதிக்கொரு ரெஜிமென்ட் என்று இல்லாமல் மெட்ராஸ் பகுதியை சார்ந்த கீழ்சாதிகளாக நடத்தப்பட்ட மக்களை கொண்டு உருவான ரெஜிமென்ட் இது .மற்ற பகுதிகளில் ஒவ்வொரு சாதிக்கும் தனி ரெஜிமென்ட்.மஹர்களுக்கு மஹர் ரெஜிமென்ட்,மராத்தா சாதிகளுக்கு மராத்தா ரெஜிமென்ட். உயர்சாதி சீக்கியர்களுக்கு சீக் ரெஜிமென்ட்,உயர்சாதி ஹிந்துக்கள் மற்றும் உயர்சாதி சீக்கியர்களுக்கு சேர்த்து புஞ்சாபி ரெஜிமென்ட்,தலித் சீக்கியர்களுக்கு சீக் எல் ஐ எனப்படும் Sikh லைட் infantry ரெஜிமென்ட்.ஜாட்களுக்கு ஜாட் ரெஜிமென்ட்,டோக்ராக்களுக்கு டோக்ரா ரெஜிமென்ட்,ராஜபுத்திரர்களுக்கு ராஜ்புட் ரெஜிமென்ட்,இரண்டும் சேர்ந்த ஆனால் தனி தனி கம்பெனிகளாக ஒவ்வொரு சாதியும் இருக்கும் grenadiers ரெஜிமென்ட் ,சாதி அடிப்படையில் கோர்கா சாதிகளுக்கு தனி தனி ரெஜிமென்ட் .இஸ்லாமியர்களில் சாதி மற்றும் வாழும் பகுதிகளை வைத்து தனி ரெஜிமெண்ட்கள்.
தமிழர்கள் மற்றும் மதராசிகள் வெள்ளையன் ராணுவத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தில் இருந்தாலும் நேரடியாக போரில் ஈடுபடும் ரெஜிமெண்ட்களில் பத்தம்போதாம் நூற்றாண்டின் இறுதியில் குறைந்து போனார்கள்.வெள்ளையன் ராணுவத்தில் fighting யூனிட்ஸ் எனப்படும் நேரடி போர் யூனிட்களில் இஸ்லாமியர்,கோர்க்காக்கள்,சீக்கியர்கள் சதவீதம் அதிகம்.
இன்ஜினியரிங் ,மெடிக்கல் ,signals ,ASC பிரிவுகளில் மதராசிகள்சதவீதம் அதிகம்.இவற்றின் பெரும்பான்மையான பயிற்சிக்கூடங்களும் தென்னகத்தில் தான்.தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் இருந்து (ராணுவத்தில் சேர்ந்த பல்வேறு சாதிகளின் கூட்டு தொகை)வெள்ளையன் ராணுவத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை நூற்றில் ஒரு சதவீதம் கூட வராது.ராணுவத்தில் சேர்ந்த பெரும்பாலான மதராசிகள் சென்னை அதன் சுற்றுப்புறங்கள்,பெங்களூரு அதன் சுற்றுப்புறங்கள், ஊட்டி அதன் சுற்றுப்புறங்கள்,கிருத்துவத்துக்கு மாறிய மக்கள் அதிகம் வசித்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான்.
ஜப்பானியரால் கைப்பற்றப்பட்ட வெள்ளையன் ராணுவத்தில் பணிபுரிந்த போர்வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட இராணுவமே இந்திய தேசிய ராணுவம்.இதில் இஸ்லாமியர்கள், வட இந்தியர்கள் அதிகம்.வெள்ளையர்கள் கூட இருந்தார்கள்.தமிழர்களும் இருந்தார்கள்.
1940 முதல் 1945 வரை பல்வேறு வழக்குகளின் கீழ் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் சிறையில் இருந்தார்கள். தேவர் மகன் என்ற தமிழ் சினிமாவில் வரும் வசனத்தை சான்றாக கொண்டு அவரின் பேச்சை கேட்டு கொண்டு பல ஆயிரம் குறிப்பிட்ட சாதி குழு மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் காடு மலை,கடல் கடந்து பொய் சேர்ந்தார்கள் என்று பலரும்சொல்வது வியக்க வேண்டிய ஒன்று.நூத்துக்கு நூறு சாதிப்பெருமை கதைகள் இதை போன்ற கட்டுக்கதைகள் தான்.
கருத்துரையிடுக