தோழர் திருமா - தோழமை சுட்டுதல்.


திருமா அவர் தென்றலை தீண்டி வந்தவர் அல்ல தனது 37 ஆண்டு கால கள அரசியலில் பல தீயைத் தாண்டியே வந்திருக்கிறார். குரலற்றவர்களின் வரலாறு என்றும் விடுதலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். அதன் படியே தனக்காக ஒரு குடும்பம் கொள்ளாமல் தனது தொண்டர்களை குடும்பமாக கொண்டு அவர்களை தலைவர்களாக மாற்ற தனது மக்களின் விடுதலை நோக்கியே அவர் நகர்ந்து கொண்டு இருக்கிறார்.
இங்கு யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது ஆனால் ஒவ்வரு முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்படும் போதும் இங்கே ஒற்றை குவியமாக ஒரு மனிதரின் குரலை எதிர்பார்த்தே அவரது சொல்லுக்கு விமர்சனம் செய்யவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது .
இவர் தான் " தாழ்த்தப்பட்ட " என்னும் வார்த்தைக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது என்ன மனநிலை ?
Image may contain: 1 person, close-up
இதுவரை வந்த வன்மம் நிறைந்த வசவுகள், பல கிண்டல் பதிவுகள் பதிவிட்ட யாரும் . திருமா பொது பிரச்சனைகள் பற்றி பேசும் போது கண்டுகொள்ளவில்லை. இதே திருமா தான் தேசம் காப்போம் மாநாடு நடத்தினார் , இதே திருமா தான் காவேரி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் , இதே திருமா தான் ஒட்டு மொத்த சமூக மக்களுக்காக பெருந்திரள் கூட்டத்தை கூட்டி சனாதானத்தை வேறெருப்போம் என்று முழங்கினார், நாளைய தலைமுறையின் நலன் காக்க பனை விதைகளை நட்டு சென்றார் , இதே திருமா தான் நீட் ,கனிம வள அழிப்பு, எட்டு வழி சாலை என்று தமிழின பிரச்சனை அனைத்திற்கும் போராடி கொண்டிருக்கிறார்.
இன்னும் இந்த கொரானாவில் பாதிக்கப்பட்ட வேற்று மாநில உழைக்கும் மக்களுக்கும் குரலாக பேசி கொண்டிருக்கிறார் . இந்த திருமா பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் போது ஏன் இந்த சமூகம் அவரை பொது தலைவராக மக்களிடம் கொண்டு செல்ல தவறியது .சொல்லுங்கள் பார்க்கலாம். பதில் உண்டா ?
தேங்கி நிற்கும் குட்டை என்ன செய்யும் பாசி , புஞ்சை என்று கிருமி கூட்டம் சேர்த்து நோயை பரப்பி கொண்டிருக்கும் அதுபோலவே அவர் மீது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டது போல பல விஷம செயல்களை செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளட்டும் விடுதலை சிறுத்தைகளின் வரலாறு, தலித் பந்தர்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடங்கியது .இன்று இந்தியாவின் முன்னணி எழுத்தாளராக இருக்கும் அருந்ததி ராய் தனது நூலில் குறிப்பிட்டு இருப்பார் கறுப்பின மக்களின் எழுச்சியை ஏற்படுத்திய " Black Panthers "ன் அரசியலை ஒத்து இருக்கிறது DPI யின் அரசியல் என்று.
இந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஜனநாயக அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களின் அங்கீகாரத்துக்கு கால் நூற்றாண்டுகள் கடந்து போராடி கொண்டிருக்கிறது . இவர்களுக்கு எதிராக எத்தனை கொலைகள் , எத்தனை மரணங்கள் , எத்தனை வன்கொடுமை , எத்தனை குடிசை எரிப்பு இதை அனைத்தையும் கடந்த தான் வந்திருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் தென் மாவட்ட ஆதிக்க சமூகத்தின் கிராமங்களில் திருமாவளவன் என்னும் நபர் உள்ளே செல்லவே தடை விதித்த ஆதிக்க வெறி சம்பவங்கள் நடந்திருக்கிறது.பல முறை அவரது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. உண்மை இப்படி இருக்க அவர் மீது வன்மம் நிறைந்த அவதூறுகள் ..
இங்கே தன் சாதி தன் மதம் என்று நஞ்சு விதைத்து தேங்கி நிற்க நோயை வளர்த்து கொண்டே கொள்கை பற்றி பேசாமல் , அறிவியலை யோசிக்க விடாமல் , அரசியலை கற்று தராத பல சாதி சங்கங்களை போலவோ, சாதி கட்சிகளை போலவோ, தேர்தல் அரசியல் நோக்கத்தை மட்டுமே கொண்டவர் போலவோ திருமா கிடையாது .தோற்றாலும் ஜெய்தாலும் என்றும் இந்த திருமாவளவன் உங்களுக்காக தான் போராடுவேன் உங்களோடு தான் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஏனெனில் அவர் எங்கள் வலி உணர்ந்தவர்.
Thiruma is RESISTANCE எங்கள் எதிர்ப்புணர்வு. அது தான் எங்கள் அடையாளங்களில் இருந்து திருடப்பட்ட மானத்தையையும் அறிவையும் மீட்டு இழந்த மக்களுக்கே அதை கொடுத்து கொண்டிருக்கிறது. நல்ல மானுடமும் , நல்ல அரசியலும் தான் புரட்சியாளர்கள் சொன்ன வழி என்று மறுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க " அமைப்பாய் திரள்வோம் , அங்கீகாரம் பெறுவோம் , அரசியல் அதிகாரம் கைப்பற்றுவோம் " என்று நல்வழிக்கு கொண்டு செல்கிறது.
என்னை பொறுத்தவரை திருமா ஒரு பெரும் ஆற்றல் (எனர்ஜி ).அது நீங்கள் பரப்பும் ஒரு சில அவதூறுகளாலும், தோழமை சுட்டுதல் எனும் கேலி கிண்டல்களாலும் அந்த ஆற்றலை அழிக்கவும் முடியாது .
.
அதே போல் அவர் மீது தலித் மக்களுக்கு எதிரான பொய்யான பிம்பத்தை உருவாக்கி விடவும் முடியாது .coz Energy can neither be created nor destroyed.
Finally we say , Our Resistance and Energy Is Thol.Thirumalavan.ஆக இந்த ஆற்றலும் எதிர்ப்புணர்வு என்றும் தேங்கி நிற்காது ஏனெனில் அது நதி.அது என்றும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். விடுதலை நோக்கி 💙❤️
தொல்.திருமாவளவன் என்னும் நதி