#வசுமித்ரா_காரல்மாக்ஸ்ஸின் #முகமூடியில்_ஒரு_காவி
வசுமித்ரா அவர்களின் இழிவான எண்ணத்தையும் மனநிலையையும் அவரின் வார்த்தைகளின் வழியே நாம் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது அவர் புத்தர் அம்பேத்கர் இருவரின் பிம்பங்களை தவறாக கட்டமைக்க முயல்வதையும் அம்பேத்கர் என்ற புரட்சியாளரை அறிவுசார்ந்த மேதையை முட்டாலாகவும அவர் வாழ்க்கை முழுவதும் எதையும் சாதிக்கவில்லை பல தவறுகளை மட்டுமே செய்தார் மதத்திற்கு ஆதரவானவர் என
ஆர் எஸ் எஸ் தொடர்ந்து சொல்லிவருவதைதான் சொல்லி கொடுத்ததை தான் உள்வாங்கி தனது சாயலில் தன் குரலில் வெளிப்படுத்துகிறார்
அவரின் பேச்சின் ஆரம்பத்தில் அவர் தனது வறுமையையும் தான் அனுபவித்த பொருளாதார நெருக்கடியையும் சொல்லி தொடங்குகிறார் அவர் அனுபவித்தது வறுமையின் வலிகள் மட்டும் ஆனால் தலித்துகள் அனுபவித்தது வறுமையின் வலியும் அதனுடன் அதைவிட மோசமான சாதிய கொடுமையின் வலியும் அந்த வலியை அவர் அனுபவித்து இருந்தால் அவரின் இந்த ஆதிக்க மனோபாவ பேச்சும் அம்பேத்கரை இழிவுபடுத்தி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டு இருக்காது இங்கே வறுமையின் பிடியில் இருந்து மீண்ட ஆதிக்கசமூகம் தன் வறுமையின் விடுதலைக்கு பிறகு தன் சாதியஆதிக்க மனநிலையை தட்டி எழுப்பும் மேட்டிமை தன்மையின் வெளிப்பாடுதான் வசுமித்ராவின் வார்த்தைகளின் வெளிப்பாடு
காந்தியை மகாத்மாவாக கொண்டாடுவதை எதிர்க்காத வசுமித்ரா சிறை சென்றால்தான் மகாத்மா அம்பேத்கரை எப்படி நவீன இந்தியாவின் மகாத்மாவாக ஏற்பது என்ற அவரின் உதாசின பேச்சில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது எக்காரணத்திற்காவும் மறந்தும் அண்ணல் அம்பேத்காரையும் அவர் தியாகத்தையும் அங்கீகரித்து பேசிவிடகூடது என்ற முன் முடிவின் வெளிப்பாடுதான்
மக்களுக்காக தியாகங்களை செய்பவர்கள் தான் மகாத்மாக்கள் அம்பேத்கர் தன் வாழ்நாளையே அனைத்து மக்களுக்கான சுயமரியாதை மற்றும் உரிமை போராட்டத்திற்க்கும் சுதந்திர இந்தியாவை வழிநடத்துவதற்கான அரசியலமைப்பு சட்டத்தை வடிமைப்பதற்க்கும் தன் வாழ்நாளை தியாகம் செய்த மாமேதை அப்பேற்பட்ட மேதையை விமர்சிக்க காமகதைகளை கருத்தியல் போல எழுதும் வசுமித்ரா போன்ற முட்டால்களுக்கு தகுதி இல்லை
இங்கே இவர்களின் இலக்கு என்பது மாக்ஸ்ஸிய முகமூடியில் ஒளிந்து கொண்டு சாதிய வண்மங்களை வெளிபடுத்துவதாகவும் தலித்திகள் மாக்ஸியத்திற்க்கு எதிரானவர்கள் என நிறுவ முயல்வதும் இந்துதுத்திற்க்கு அச்சுறுத்தலாக இருக்கும் அண்ணல் அம்பேத்கர் புத்தர் போன்ற வரலாற்று தத்துவ ஆளுமைகளை மழுங்கடிக்கும் வேலையை செய்வதே ஆகும்
இவர்கள் மாக்ஸின் முகமூடியில் ஒளிந்துகொண்டு இருக்கும் காவிகளின் கைபாவைகள்.
வை.ராம்கி
கருத்துரையிடுக