அவர்கள் ஒன்றும் செய்யவில்லை,நாம் நீதிக்கு போராடுவோம்...

அவர்கள் ஒன்றும் செய்யவில்லை,
நாம் நீதிக்கு போராடுவோம்...
கைவிலங்கிடப்பட்டு,
பூமியில் முகம் அழுத்தப்பட்டு ,
கழுத்து முழங்காலினால் நசுக்கப்பட்டு கொண்டிருந்தது ,
அவர்கள் ஒன்றும் செய்யவில்லை...
காவல் அதிகாரியை ஐயா என்றார் ,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

அவர் உயிர்வாழ மன்றாடினார்,
தண்ணீருக்கு இறைஞ்சினார் ,
இரக்கத்தை எதிர்பார்த்தார் ,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

அவர் மூக்கில் குருதி வழிந்தது,
உடல் நடுங்கியது,
உடல் தளர்ந்தது,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

அவர் உடைந்து அழுதார்,
என்னால் மூச்சு விட முடியவில்லை
என முழுங்கினர்,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

மேலும் கடைசி பன்னிரு முறைகள்
என்னால் மூச்சு விட முடியவில்லை, முடியவில்லை முடியவில்லை ......
என கதறினார்............
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

கடைசி முறையாக,
என்னால் மூச்சு விட முடியவில்லை என்றார்,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...
அவர் சுயநினைவை இழந்தார்,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

தீயணைப்பு வீரர் ஒருவர்
அவரின் நாடி துடிப்பு பரிசோதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார் ,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

பணியில் இல்லாத மருத்துவ நிபுணர் ஒருவர் அவர் கழுத்தை நசுக்கிக் கொண்டிருந்த அதிகாரியின் முழங்காலை எடுக்க மன்றாடினர்,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை..

மூச்சு காற்று இன்றி,
சுவாச உறுப்புகள் அலறின,
மூளை ஸ்தம்பித்தது,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

அவர்கள் ஜார்ஜ் பிளாய்டு சாவதை கண்டுகளித்தனர்,
அவர் வாழ்வு மங்கத்தொடங்கியது,
அது ஒரு அதிகாரப் படுகொலை,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

அவர் மூச்சு திணறி தரையில் கிடந்தார்,
அவர்கள் ஒன்றுமே செய்ய வில்லை...

அந்த வலி நிறைந்த எட்டு நிமிடங்கள் ,
நான்கு காவல் அதிகாரிகள் கண்டுகளித்தனர்,
அவர் தன் அம்மாவின் நினைவில் உடைந்து அழுதார்,
ஒரு வளர்ந்த மனிதன் கதறினார்,
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

தனக்கு உயிர்கொடுத்தவளை எண்ணி அழுதார்,
அந்த தாயை எண்ணி தன் சாவை
நோக்கி பயணமானர்,
இந்த வலி நிறைந்த காட்சிகளை
கண்ட பின்பும்
அவர்கள் ஒன்றுமே செய்ய வில்லை...

ஒரு கறுப்பு மனிதன்,
ஒரு மென்மையான அசுரன்,
அவர் கறுப்பு என்பதால் அநியாயமாக கொலை செய்யபட்டார்,
இத்தனைக்கு பிறகும்
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

காரணிகள் உணர்த்தும் நிறவெறியை,
இரட்டை நிலைப்பாட்டை,
கொலைக்கு காரணமான அலுவலர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்,
உயிர் போன பிறகும்
அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை...

இன்னும் நீதி வழங்கவில்லை,
யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில்
-ஞாட்பன் சிவா...Gnatppan Siva