அம்பேத்க‌ர் "அர‌சிய‌ல்"*

பா. ர‌ஞ்சித்தோட‌ திரைப்ப‌ட‌ம் ஒன்றில் ட‌ய‌லாக்
''காந்தி க‌த‌ர் உடுத்தின‌திலேயும் அர‌சிய‌ல் இருக்கு, அம்பேத்க‌ர் கோட்-சூட் போட்ட‌திலேயும் அர‌சிய‌ல் இருக்கு.''
*ஜி.டி.நாயுடு* அவர்களுடைய வழக்கு ஒன்று அப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதை ஒரு *வழக்கறிஞராக ஏற்று ந‌ட‌த்தி முடித்துக் கொடுத்தவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்.
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறைய பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார்
ஜி.டி.நாயுடு.
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம், அதற்கு பதிலாக நான் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயண செலவையும் அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் " என்று.
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்.
பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் *ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம்* ஜி.டி.நாயுடு.
"பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று சொல்லி அருகே இருந்து சிற‌ப்பாக‌ அவ‌ரை பார்த்துக்கொள்வாராம்..
ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை "தி இந்து" பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்.
பேட்டியின்போது ரிப்போர்ட்ட‌ர் கேட்கிறார்....
"டாக்டர் அம்பேத்கர் அவ‌ர்க‌ளே, காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ இவ்வ‌ள‌வு ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள். அத்தோடு எப்போதுமே கோட் சூட் அணிந்து வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே, ஏன்..?"
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்...
*காந்தி அவர்கள் பல்வேறு வகையில் ச‌மூக‌ உளவியலால் பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும்* *உளவியல் ரீதியில் தாக்குகிறார்* . காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறாரே என்று எண்ணும் எம் ம‌க்க‌ள், *நாம் சட்டை போடால் என்ன‌ போடாவிட்டால் என்ன* என்று எண்ண‌ த‌லைப்ப‌டுகிறார்க‌ள். *ஏற்கனவே சட்டைகூட‌ போடாத எம் மக்கள், வாழ்விய‌ல் முன்னேற்ற‌ம் பற்றி* *யோசிக்கவே மாட்டார்கள், பிற‌கு எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை* *பெறுவார்கள்..?"*
*நான் கோட் சூட் அணிகிறேன், மிக‌வும் விலையுயர்ந்த டை மற்றும் ஷூ போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன். என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க *உளவியலாக அவனின் மனம் தயாராகும், க‌டுமையாக‌ உழைப்பான். சட்டையே போடாமல் திரிந்தவன்* *புத்தாடை உடுத்துவான். வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான்* …" என்றிருக்கிறார் அண்ண‌ல்.
வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த இந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.
இதுதான் அம்பேத்க‌ர் "அர‌சிய‌ல்"*