ஒரு கட்சியின் சித்தாந்தமே அந்தக் கட்சியின் தொண்டர்களை வழி நடத்துகின்றது

ஒரு கட்சியின் சித்தாந்தமே அந்தக் கட்சியின் தொண்டர்களை வழி நடத்துகின்றது. #கம்யூனிஸ்ட்_கட்சி யில் இருக்கும் ஒரு தொண்டனுக்கும் #கார்ப்ரேட்_கட்சி யில் இருக்கும் ஒரு தொண்டனுக்குமான வித்தியாசத்தை குறைந்தபட்ச #அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட கண்டுபிடித்து விடுவார்கள்.
ஒரு #கம்யூனிஸ்ட் எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் சாமானிய மக்களுக்கு எதிரான செயலை செய்யத் துணிய மாட்டான். தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் கட்சியோடு இணைத்தே மதிப்பீடு செய்வான்.
தன்னுடைய தவறுகளால் எந்த வகையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். காரணம் கட்சி சாமானிய மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலையை மையமாகக் கொண்டு செயல்படுவதால், கட்சிக்குள்ளும் பொதுச் சமூகத்திலும் கண்ணியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுதான்.
அதே சமயத்தில் பொறுக்கிகளையும், மக்கள் விரோதிகளையும், லும்பன்களையும், உத்தமன் வேசம் போட்டு ஊரை ஏமாற்றும் கழிசடைகளையும் சமரசமின்றி எதிர்ப்பார்கள்.
ஆனால் பொறுக்கித் தின்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கார்ப்ரேட் கட்சிகளில் நிலைமை இதற்கு எதிர்நிலையில் இருக்கும். மாஃபியாக்களும், கந்துவட்டிக் கும்பலும், கள்ளச் சாராய பேர்வழிகளும், இன்னும் எவன் எவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடுகின்றானோ அது போன்றவர்களின் நிரந்தரப் புகலிடமாக #கார்ப்ரேட் கட்சிகளே இருக்கின்றன.
- தமிழச்சி