குரைக்கும் கருத்துச் சுதந்திரம்


மிகக் கேவலமான கார்ட்டூனை வரைந்த வர்மாவை கைது செய்ய வேண்டும். தலித்துகளைத் தாக்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தலைவர்களை இழிவுப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
அந்தக் கார்டூனை நான் இங்கே போடமுடியாது. ஆனால் இவர்களை நாம் விட முடியாது. சட்டப்பூர்வமான நடவடிக்கைத் தேவை. அரசுகள் அதைச் செய்ய வேண்டும்.
புரட்சியாளர் அம்பேத்கர் இழிவுப்படுத்தப்பட்டார். பாலா ஒரு கார்ட்டூன் போட்டார். அதைவிட வர்மா என்பவர் மோசமான ஒரு கார்ட்டூனைப் போட்டிருக்கிறார்.
இதையும் கருத்துச் சுதந்திரம் என்பீர்களானால் போய் குப்பையில் விழுங்கள். தனிமனிதனின் மாண்பினைக் குலைக்கும் தன்மையுடைய உங்கள் கருத்துச்சுதந்திரம் குரைக்கும் தன்மையுடையது. மிகவும் மோசமான மனநோய்த் தன்மையுடையது.
அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும். இதையும் தலித்துகளே கேட்க வேண்டும் என்றால் ஓட்டுப் பொறுக்க இனி யாரும் தலித்துகளிடம் வர வேண்டாம்.
படித்து முனைவர் பட்டம் வாங்கியவர்
எளிய குடும்பத்தில் பிறந்து தன் அறிவால் ஆற்றலால் உழைப்பால் உயர்ந்தவர். தினமும் படிப்பவர். சிறந்த எழுத்தாளர். பாலினச் சமத்துவர், சமூக விடுதலைக்கு தன் வாழ்வைத் தந்த ஈகியர், பகுத்தறிவாளர், ஜாதி மத சிந்தனையற்ற மனிதத்தன்மையர்,சமத்துவப் போராளி. அவர் திருமா. பண்பாளர். அவரை இழிவுப்படுத்துவது ஜாதிவெறி அல்லாமல் வேறு என்ன?
ஆனாலும்
ஜாதியற்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்கியே தீருவோம். சமத்துவம் காப்போம். சனாதனம் எதிர்ப்போம்.
அதற்கான விளைவுகளாக இத்தகைய அவமானங்கள் வந்தாலும் பின் வாங்க மாட்டோம். அவமதித்தவர்களையும் விட மாட்டோம்.
கவிஞர் Yazhan Aathi