கொரானாவது மயிராவது சாதி தான்டா சமூகம்
தமிழகத்தில் "கொரோனோ" பாதிப்பினால் பிறப்பிக்கட்ட ஊரடங்கில் பட்டியல் பிரிவு மக்கள் மீது சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமைகள்:
--------------------------------------------------------------------
1) திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் சசிகலா அவர்களால் சொரியங்கிணத்துப் பாளையம் அருந்ததியர் மக்கள் வீட்டில் மாட்டுக்கறி சமைத்ததால் உணவில் பினாயில் ஊற்றிய சம்பவம்.
2) திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சக்திவேல் கவுண்டர் (ம) முன்னாள் அமைச்சர் துரைச்சாமி மகன் சுதர்சன் ஆகியோர் மேட்டுப்பாளையம் உராட்சிக்குட்பட்ட பாப்பம்பாளையம் அருந்ததியர் காலனி மக்களை தாக்கி, கோலை மிரட்டல் விடுத்து, ஊர்க்கட்டுப்பாடு விதித்த சம்பவம்.
3) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பிலிப்பாகுட்டை சமத்துவபுரத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த அருந்ததியர் பெண் அனிதாவை சாதிவெறிக் கும்பல் செருப்பால் அடித்தத சம்பவம்.
4) கடந்த மார்ச் 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் அருகேயுள்ள தோப்புரை சேர்ந்த பறையர் இளைஞர் ராஜதுரை சாதி வெறியர்களால் வெட்டிப்படுகொலை.
5) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் பாண்டியன் சாதி வெறியர்களால் மின்சாரம் பாய்ச்சி படுகொலை.
6) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மாங்குளம் உராட்சிக்குட்பட்ட மூங்கிலுரணியைச் சேர்ந்த அருந்ததியர் சமுகத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான பாக்கியம், லட்சுமி மீது சாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்.
7) கடந்த மார்ச் 26-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அரும்பட்டு கிராமத்தை சேர்ந்த பறையர் இன இளைஞர்கள் பொதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்றதால் வன்னியர்களால் கொலை வெறித் தாக்குதல்.
8) நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கோட்டைபட்டி. இக்கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் தமிழ் செல்வன் ஆதிக்க சாதியை சேர்ந்த கவிதா என்கிற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு உள்ளார். கவிதாவின் உறவினர்களால் ஆபத்து என்பதினால் தம்பதியினர் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 16.04.2020 அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை எடுத்து கொண்டு 22.04.2020 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்து உள்ளனர். இதனை தெரிந்து கொண்ட கவிதாவின் சாதிக்காரர்கள் 50 பேர் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு 27.04.2020 அன்று தலித் குடியிருப்புக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 தலித்துகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
9) புதுக்கோட்டை, கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். எம்.பி.ஏ. பட்டதாரியான தலித் இளைஞர் முருகானந்தமும் ஆதிக்க சாதியை சேர்ந்த பானுப்பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து கடந்த 21.04.2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பானுப்பிரியாவின் உறவினர்கள் 15 பேர் முருகானந்தத்தை கடுமையாக தாக்கி பானுப்பிரியாவை கடத்தி சென்றனர். பின்னர் பானுப்பிரியா மீட்கப்பட்டார்.
10) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள மொரப்பந்தங்கலில் சாதிமறுப்பு திருமணம் செய்த ஒட்டர் சமூக இளைஞர் சுதாகரன் சாதி வெறியர்களால் ஆணவ படுகொலை.
11) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணுடன் பறையர் இன இளைஞர் பேசியதற்கு, எந்த விசாரணையும் செய்யாமல் விடுமுறையில் இருந்த காவலர் கொடூரமாக தாக்கி மண்டியிட வைத்து அவர் அணிந்திருந்த டாக்டர் அம்பேத்கார் அவர்களின் படம் பொறித்த டி-சர்டை கழற்றி தீ வைத்த சம்பவம்.
12) திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் வட்டம் சூரியந்தங்கலில் அருந்ததியர் இளைஞர் தனசேகரன் பொதுப்பாதையில் டூவீலரில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக, சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு டூவீலர் அடித்து நொறுக்கப்பட்டு வீடுகளும் சூறையாடப்பட்ட சம்பவம்.
13) திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வட்டம் கீழ்ப்பாச்சார் தண்டா கிராமத்தில் அரசு பொது இடத்தில் குடியிருக்கும் 10 அருந்ததியர் குடும்பங்களை காலி செய்ய வற்புறுத்தி, அவர்களை தாக்கி, அவர்களது வீடுகளை சாதி வெறியர்கள் JCB எந்திரம் மூலமாக இடித்து நொறுக்கிய சம்பவம்.
14) உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் ஆதி சுரேஷ். அம்பேத்கர் உருவ படத்தை சாணம் பூசி கேவலப்படுத்திய சாதி இந்து வன்கொடுமை கும்பல் குறித்து பதிவு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாதி வெறி கும்பல் கடந்த 23.04.2020 அன்று ஆதிசுரேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது.
15) கடலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளரின் தந்தை சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை.
16) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேட்டுள்ள வேப்பன்காடு கிராமத்தில் 3பறையர் இன இளைஞர்களை சாதி வெறியர்கள் பொது இடத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம்.
17) சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் T.கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பெண் அம்சவள்ளி (ம) தொடக்க வேளாண்மை வங்கியின் (PACB) உறுப்பினராக அருந்ததியர் சமூக இளைஞர் தனபால் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மக்கள் பிரதிநிதிகளான இருவரையும் பணிசெய்ய விடாமல் தடுக்கும் சாதிவெறிக் கும்பல்.
18) தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் அருந்ததியர் மக்களை பொதுப்பாதையில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கிய சம்பவம்.
19) தலித் மக்களை தரக் குறைவாக இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொண்ட நடராஜன், சக்திவேல் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடராஜன் கைது செய்யப்பட்டு உள்ளார். சக்திவேல் என்பவர் திட்டக்குடி அருகில் உள்ள கொரக்கவாடி பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
20) கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேதகர் அவர்களின் சிலையை அவமதித்த சாதி இந்துக்கள்.
21) கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே எறுப்புக்காடு பகுதியில் அருந்ததியர் இளைஞர் வினோத் சாதி வெறியர்களால் படுகொலை.
22) தேனி மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்த வசுமித்ரா என்கிற சாதி வெறியன் தனது முகநூல் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை முகநூல் இழிவாக பேசிய சம்பவம்.
23) ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பாலன் பணியின்போது மரணமடைந்தால் பாலனின் உடலை குப்பை வண்டியில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம்.
24) இராணிப்பேட்டையில் தலித் இளைஞர் மில்டன் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சாதி வெறியர்கள்.
25) தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு காவல்நிலைய எலகைக்குட்பட்ட கிளாமங்கலம் பறையர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்திய கள்ளர்கள்.
26) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பக்குடி கிராமத்தில் தனது தோப்பிற்கு வேலைக்கு வராத காரணத்தினால் தலித் இளைஞர் ராஜேஷை காவல்துறை முன்பாக கட்டிவைத்து கத்தியால் குத்தி, அவரது தாய் ராஜகுமாரியை தாக்கிய சாதுவெறியன் நீலகண்டன்.
27) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சி புதுரில் குறவர் இன பெண் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை பணி செய்ய விடாமல் சாதியைச் சொல்லி திட்டிய குப்புசாமி என்கிற சாதி வெறியன்.
28) நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த அருந்ததியர் சமூக சட்டக்கல்லூரி மாணவர் சசிக்குமார் மீது சாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்.
29) சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பூக்கடை பகுதியைச் சேர்ந்த பறையர் இன பட்டதாரி இளைஞர் விஷ்ணுபிரியன் சாதி வெறியர்களால் படுகொலை; அவரது தம்பி நவீண்குமார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
30) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் ஆதனுர் ஆதிதிராவிடர் காலனி பறையர் இன மக்கள் மீது சாதி வெறியாட்டத்தில் ஈடுபட்ட வன்னியர்கள்
தொகுப்பு...
செ.பீமாராவ் சாக்யா,
தலித் விடுதலை இயக்கம்,
தமிழ்நாடு.
09.05.2020
கருத்துரையிடுக