பிம்ப உடைப்பு....
பிம்ப உடைப்பு....
அதாவது ஃபர்னிச்சர உடைக்கறது... எப்பொழுது அவசியமாகிறது...,
ஒரு நபர் மீதோ ஒரு அடையாளத்தின் மீதோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்பது நமது எதிர் சித்தாந்தத்தின் செயல்திட்ட பரவலாக்கத்திற்கு உதவும் போதோ அல்லது அதன் மீது சவாரி செய்து பலம் பொருந்தியவராக நம் முன் நிற்கும்போதோ அதை உடைத்து அவர்களை பலவீனப்படுத்தவும்... செயல்திட்டங்களை சிதைக்கவும் தேவைப்படலாம்....
திராவிட சித்தாந்திற்கு நேர் எதிர் சித்தாந்தமான பார்ப்பனியத்திற்கென்று தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான ஐகான் யாரும் இல்லை....
அதனால் H ராஜா தொடங்கி ஒட்டு மொத்த இந்துத்துவ கூட்டமும் பெரியாரிய சிந்தனைக்கு எதிராய் தமிழகத்தின் ஆன்மீகத் தலைவராக முத்துராமலிங்க தேவரை தூக்கி பிடித்து வருகின்றது....
“ஶ்ரீரங்கத்துல வச்ச குங்குமத்த அழிக்க முடிஞ்ச ஸ்டாலினால குரு பூஜ விபூதி ய அழிக்க முடியுமா” னு சவால் விட்டு பேசறான்..... அந்த கேள்வி நியாயமோ இல்லையோ ஆனா அப்படி ஒரு கேள்விய எதிரி எந்த பிம்பத்த அடித்தளமா வச்சு கேக்கறான்....????
பெரியார் மண் இல்ல முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக மண் னு வெளிப்படையா சொல்றான்....
உங்க சித்தாந்தத்துக்காக தா பேசறீங்க னா நீங்க முதல்ல கைய வச்சிருக்க வேண்டிய ஃபர்னிச்சர் இது தான....
பெரியாருக்கு முன்னோடி னு சொல்ற பிம்பத்த உடைப்போம்.... பெரியாருக்கு எதிரா நிறுத்தற பிம்பத்த தொட மாட்டோம்......
... எனக்கு போட்டியா வரான் என்னோட பெரியவன் னு சொல்றான் னு கூட இருக்கவங்கள அடிச்சுட்டு.... எதிர்ல நிக்கறவன நெருங்க வலுவான காரணம் இன்னும் கிடைக்கல னு சப்ப கட்டு கட்டறதுக்கு பேர்
அடிச்சு ஆடறது இல்ல...
அடக்கி வாசிக்கறது டியர் Ravishankar Ayyakkannu
அடிச்சு ஆடறது இல்ல...
அடக்கி வாசிக்கறது டியர் Ravishankar Ayyakkannu
கருத்துரையிடுக