சுடுகிற வடை எதுவும் உனக்கானது இல்லை.- தீதே சாரம்

கொடுக்கப் போவதாகச் சொல்லப்படுவது எதுவோ அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது.
இன்று எடுக்கடுவது போலவே நாளையும் உன்னிடமிருந்து எடுக்கப்படும்.
கொடுக்கப்படும் எதுவோ அதுவும் முன்னர் திருப்பித் தராத எவரோ அவருக்கே கொடுக்கப்படும்.
இங்கு எதுவும் உன்னுடையதாக இருக்க முடியாது. ஏதாவது உன்னிடமிருந்தால் அதுவும் உன்னிடமிருந்து பறிக்கப்படும்.
எப்போது நாங்கள் கொடுத்தோம் நீ பெற்றுக் கொள்ள.
இப்போதும் கூட ஏன் எங்களை எதிர்பார்க்கிறாய்.
சுடுகிற வடை எதுவும் உனக்கானது இல்லை.
நேற்று சுட்ட வடை
இன்று சுடுகிற வடை
நாளை சுடப்போகிற வடை
இவை எதையுமே நீ எதிர்பார்க்க வேண்டாம்.
நேற்று ரேசன் பறித்தோம்.
இன்று மின்சாரம் பறிக்கிறோம்.
நாளை கோவணத்தையும் பறிப்போம்.
உன்னுடையதாக நம்புவதும் உன்னுடையதல்ல.
இன்று உன்னுடையதாக இருப்பது நாளை என்னுடையதாக இருக்கும்.
என்னுடையதாக இருப்பதும் என்னுடையதாகவே இருக்கும்.
எம்முடையதாக இருப்பவை அனைத்தும் எக்காலத்திலும் குறைவற்று இருக்கும். அவை மேலும் மேலும் பெருக்கப்படும்.
உனக்கு ஏதேனும் கிடைக்குமென எதிர்பார்ப்பதும் தரப்போவது இல்லை.
தரக்கூடாதவர்களுக்குத் தருவதும்
தரப்பட வேண்டியவர்களுக்குத் தரமால் இருப்பதுமே எமது நியதியாகும்.
தீதே சாரம்