இணையத்தில் இணைவோம் - த.தீ.ஒ.மு கோவை

அன்பான தோழர்களே! 

பாசிசத்தின் கொடுங்கரங்கள் மனிதனை சாதியாலும், மதமாகவும் பிரித்து மனிதத்தை புதைக்கும் இந்த காலகட்டத்தில் மனிதம் காக்க பாசிசத்தை வீழ்த்த சிவப்பும், நீலமும், கருப்பும் இணைந்து போராடி வரும் இந்த வேளையில் இந்த ஒற்றுமையினை சீர்குலைத்து பாசிசத்தின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவரான புரட்சியாளர் அம்பேத்கர் மீது வன்மம் நிறைந்த கருத்துக்களை கருத்துரிமை என்ற பெயரில் சில தனிப்பட்ட சாதியவாதிகள் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக சில புரட்சி பேசும் ஆயுத குழுக்கள் வன்மமான முறையில் கருத்துக்களை பதிந்து வருவதும் வேதனையளிக்கும்
நிகழ்வாகும். தன் வாழ்நாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனோடு அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாடுபட்ட தலைவரை சாதி வன்மத்தோடு கருத்து தெரிவித்தற்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கு பதிவு செய்தால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை தவறாக பயன்படுக்கிறார்கள், முதலாளித்துவ சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது அவசியமான ஒன்று. மேலும் இந்த நபர்கள் சாதிய வன்கொடுமைகள் நடக்கின்ற போது மெளனமாக கடந்து செல்பவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இருக்கும் அம்பேத்கர் ஒரு அணையா நெருப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல். முன்னைக்காட்டிலும் நீலமும், சிவப்பும், கருப்பும் இணைந்து பாசிசத்திற்கு எதிராக வலுவாக போராட வேண்டிய தேவை உள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் கூட சாதிய வன்கொடுமைகள் அதிகாரித்துள்ளது என்பதனை கவனத்தில் கொண்டு இதற்கு எதிராக போராடவும், சாதியவாதிகளுக்கு எதிராக நமது ஒற்றுமையினை வலுப்படுத்தவும் வேண்டியது அவசியமானது. ஆகவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கோவை மாவட்டக்குழு அணையா நெருப்பு அம்பேத்கர் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கத்தினை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து தோழர்களும் பங்கேற்கவும். இதில் திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மனி கலந்து கொள்கிறார்.

லால்சலாம் நீல்சலாம்! 

இரா.ஆறுச்சாமி மாவட்ட செயலாளர் ததீஒமு கோவை