டெல்டாவில் துளிர்விடும் சாதிவெறி தாக்குதல்கள்..

டெல்டாவில் துளிர்விடும் சாதிவெறி தாக்குதல்கள்..
தஞ்சை மாவட்டம்
குடந்தை ஒன்றியம் விளந்த கண்டம் அருகே உள்ள ராஜங்கநல்லூர் மேலத்தெருவில் உள்ள 12 பள்ளர் சமூக மக்களை நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கியுள்ளனர் இருபதுக்கும் மேற்பட்ட வன்னியர் சமூக கும்பல்..
பொது இடத்தை ஆக்கிரமித்த முருகன் என்ற வன்னியர் சமூகத்தவரை தட்டிக் கேட்ட
தலித் மக்களை இரவு பதினோரு மணிக்கு இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிவெறிக்கும்பல் சேரிக்குள் புகுந்து மின்சாரத்தை துண்டித்து கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்..
இரவு டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு உடனே வந்து மக்களை சந்தித்தார்..இன்றைய தினம் அனைத்து தலித் அமைப்புகளும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலிய்றுத்தினோம்.. குற்றவாளிகள் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது..
களத்தில் அனைத்து தலித் அமைப்புகளும் ஒன்றிணைந்து நிற்கின்றோம்..
டெல்டாவில் துளிர்விடும் இந்த சாதித்தாக்குதல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது நம் தலையாய கடமை....
-பேராசிரியர் டி௭ம் புரட்சிமணி
தலைவர், நீலப்புலிகள் இயக்கம்- தமிழ்நாடு.
Image may contain: 4 people, crowd and outdoor