வீதிகளிலும்,ஊடகங்களிலும் அவரை கிழித்து தொங்கவிட வேண்டும் - இரா.திருநாவுக்கரசு
எழுத்தாளர்,வசுமித்ர னின் பொருக்கித்தனமான எழுத்துக்கு வழக்கு போடுவதை விட .....
வீதிகளிலும்,ஊடகங்களிலும் அவரை கிழித்து தொங்கவிட வேண்டும்.
அந்த சிந்தனையின் பின்னணியை அம்பலப்படுத்த வேண்டும்.
இந்திய சமூகத்தின் ஊனத்திற்கு மருத்துவம் சொன்னது அம்பேத்கர்;
"அந்த மருத்துவத்தை விட சிறந்த மருத்துவம் இருந்தால் சொல் " இல்லையேல் அனைத்து பொறிகளையும் மூடிக்கொண்டு கிட...! என்று முழங்க வேண்டும்.
நாம் எழுப்பும் இந்த முழக்கத்தில் முற்போக்கு முகமூடிகள் கிழிந்து தொங்க வேண்டும்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய பார்ப்பன அருண் ஷோரிக்கும் மார்க்சிய வசுமித்ர வுக்கும் உள்ள ஒற்றுமைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
அனைத்து இயக்கங்களிலும் மறைந்து கொண்டிருக்கிற வசுமித்ர க்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
அவர்களின் சாயங்களை வெளுக்க வேண்டும்.
மார்க்சிய,திராவிட,தமிழ் தேசிய 'செண்ட்' களை அடித்து திரிந்து கொண்டிருக்கும் சாதி,தீண்டாமை அழுக்குகளை வெளியே கொண்டு வர வேண்டும்.
வழக்கு இதற்கு தீர்வாகாது.
சாதி,தீண்டாமை வெறி கொண்டவர்கள் ஜட்ஜ் களாக இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்கு பாபாசாகேப் மேதை அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தும் நவீன தீண்டாமையாளர்களை,போலி முற்போக்கு புரட்சியாளர்களை மக்கள் மத்தியில்.....
அம்பலப்படுத்துவதான் சரியான வழி!
இரா.திருநாவுக்கரசு
கருத்துரையிடுக