யானைகள் காடுகளின் மூத்த தாய்


யானை பிரம்மாண்டமான உயிரினம் அதனை பார்க்க நமக்கு எப்போதுமே ஒரு வித ஆச்சர்யம் கலந்த வியப்பு எற்படும் அப்படிப்பட்ட யானைகளின் ஆச்சர்யமான நமக்கு தெரியாத தகவல்கள் உங்களுக்காக.........!!!!!
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!!!!! ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும்
ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும்
சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும்.இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும்.
அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும்.
ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது


500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள்.
மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறோம்,
இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!
இன்னும் ஆச்சரியங்கள்!!!
இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்?
ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல.
சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்கும்
இன்னொரு தகவல்.
யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது.
மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.
யானைகள் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கும் மற்ற நேரங்களில் சாப்புடும்
ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும்
யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்
இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.
எந்த பாலூட்டிகளை
விடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் 22 மாதங்கள்
யானைகள் கூட்டமாக வாழும் உயிரினம் அது கூட்டத்தை சார்ந்தே இருக்கும். கூட்டத்தை வயதான யானைகள் வழிநடத்தும்.
தனித்து வரும் யானைகள் ஆக்ரோஷமாக காணப்படும்
காடுகளின் மூத்த தாய் யானைகள்தான்
பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்பு சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்
அனால் அவை இன்று அழிவின் விளிம்பில் உள்ளன
யானைகளின் அழிவிற்கு நிச்சயம் மனிதர்களாகிய நாம்தான் கரணம் உலகம் முழுவதும் தினம்தோறும் யானைகள் அழிந்துகொண்டிருக்கின்றன தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது ,,
மேலும் யானைகளின் வாழ்விடங்கலானா காடுகள் அளிக்கப்படுவதும் அதனால் அவைகள் உணவு குடிநீர் இன்றி இறக்கின்றன.மேலும் யானைகளின் வழித்தடங்கள் அளிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால் அவை வழிமாறி ஊருக்குள் வருவதால் மனிதர்ககளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது
காடுகளின் மூத்த தாயான யானைகளை பாதுகாப்போம்

முகநூல் பதிவு - தோழர் நாசர்