இந்தி மொழி பற்றி காயிதே_மில்லத் அவர்கள்
அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக்
கணை போல் தொடுத்தார்.
காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?
பதில்: இந்தி
காயிதே மில்லத்
ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக வைத்தார்கள்?
பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.
காயிதே மில்லத் இந்தியாவின் தேசியப் பறவை எது?
பதில்: மயில் .
காயிதே மில்லத்
மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு,
இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை.
ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?
யாரும் வாய் திறக்கவில்லை.
காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,
இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?
யாரும் வாய் திறக்கவில்லை.
காயிதே மில்லத்
கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது.
சவாலாகச் சொல்கிறேன்.
தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.
நேரு கேட்டார்..
நீங்கள் முஸ்லீம்,
ஏன் தமிழ் மீது பற்று?
ஐயா அவர்கள் சொன்னார்..
இசுலாம்_எனது_ வழியாகும்..
இன்பத்_தமிழே_எனது_மொழியாகும்
Facebook Post - Comrade Nazar

கருத்துரையிடுக