மாணவி பலாத்காரம் போலீஸ்காரர் கைது!

மாணவி பலாத்காரம் போலீஸ்காரர் கைது!
Image may contain: 1 person, selfie and close-upஅரூர் : திருமணம் செய்து கொள்வதாக கூறி, 16 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி, அரூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்:‍
  • கோவையில் பெற்றோருடன் இருந்து, பிளஸ் 1 படித்து வருகிறேன்.
  • 2017 மே, 10ல், சொந்த ஊரில், விடுமுறையில் இருந்தபோது, தர்மபுரி, சேஷம்பட்டியை சேர்ந்த உறவினர் வெற்றிவேல், 27, என்பவர் கட்டாயப்படுத்தி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
  • திருமணம் செய்வதாக கூறியதால், இதை பெற்றோரிடம் கூறவில்லை.
  • வெற்றிவேலுக்கு போலீசில் பணி கிடைத்ததால், கோவை, போத்தனுார் காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
  • கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், சேஷம்பட்டி வந்த அவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
  • ஏப்., 29ல், பெற்றோருடன் சென்று, அவரிடம் நியாயம் கேட்டபோது, 'திருமணம் செய்ய முடியாது, முடிந்ததை பார்த்துக் கொள்' என கூறினார்.
  • இதற்கு, அவரது தாய், அண்ணன், மாமா உடந்தையாக இருந்தனர்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
  • இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப் பதிந்து, 'போக்சோ' சட்டத்தில் வெற்றிவேலை கைது செய்தார்.
  • வெற்றிவேல், பொள்ளாச்சி போக்குவரத்து பிரிவில், போலீசாக பணிபுரிகிறார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.05.2020