சாதி மலத்தில் வாழும் கொடூர குற்றவாளிகள்
ஒரு நிமிடம் கூட பார்க்க முடியவில்லை
அந்த சாதி மலத்தில் வாழும் கொடூர குற்றவாளிகள்
பட்டியலினப் பெண்ணின் வாயில் மலத்தை ஊற்றி
குடிக்க வைத்த காட்சியை.
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அந்த நாற்றம்
தொண்டையில்தான் நிற்கும்.

அந்தக் குற்றவாளிகள்
திருத்தப்பட முடியாத அளவுக்கு இறுகிப்போய் இருக்கிறார்கள்.
இதனைக் கடந்து போகும் மேல்சாதி வெறியர்களுடன்
உரையாடும்போது அவர்கள் கேட்கும் கேள்விகள்
இன்னும் கோரமான முகத்தைக் காட்டுகின்றன.

சில மாதங்களுக்கு முன்னால் உத்தர பிரதேசத்தில்
ஒரு கிராமத்தின் பிரசவ ஆசுபத்திரிக்குள்
அனுமதிக்கப்படாத ஒரு ஏழைப்பெண்
(தலித் பெண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.)
அந்த மருத்துவமனை வராந்தாவில் வெறும்தரையில் தானே
பிரசவித்த காட்சி முகநூலில் வெளிவந்தது.
அந்தப் பெண் மெதுவாக நகரந்து தன் உடையை சரி செய்தாலும,
தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இரத்தம் பரவிக்கிடக்க
சுற்றி நின்று ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்த்தனர்.
அதில் சில விடலைப்பருவ இளைஞர்களின்
பார்வையும் சிரிப்பும் உண்மையில் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அந்தப் பதிவில் இன்னூட்டமிட்ட ஒருவர்
அது முறை தவறிப்பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்று கருத்து
கூறியிருந்தார். அவருடைய விவாதம் முழுவதும் அந்தப்பெண்ணைச்
சுற்றி நின்றவர்களின் நடத்தையை நியாயப்படுத்துவதாகவே இருந்தது.
கொலைவெறிக்கு இணையான சாதிக் கண்ணோட்டம்
வெவ்வேறு அளவுகளில் ஒவ்வொருவர் மனதிலும் தேங்கி நிற்பதை
நேரடியாகப் பார்க்கிறேன்.

சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடுமையான விதிமுறைகளயும்
தண்டைகளையும் வழங்குகிறது.
ஆனால் இந்த சட்டம் காவல்துறையாலும் அரசுகளாலும்
முறையாக செயல் படுத்தப்பட்டால் மட்டும் தான்
இந்த குற்றங்களை தடுக்க முடியும்.
இத்தகைய குற்றவாளிகளை தண்டிக்கவும் முடியும்.
ஆனால் இந்த நேரத்தில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்
கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு தீர்ப்பை
உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு பிறப்பித்தது.
அந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மறுத்து வருகிறது.

பார்ப்பனசாதிக்கும் பட்டியல் சாதிகளுக்கும் இடையில் இருக்கும்
சாதிகளில் பிறந்த ஆணும் பெண்ணும் தங்கள் அறிவையும்
மனசாட்சியையும் கொஞ்சமேனும் நியாயத்தின் பக்கம்
திருப்ப வேண்டும். இப்படி மலத்தை கரைத்து ஊற்றுகிற
காட்டுமிராண்டிகளை கண்டிக்க மறுத்து கடந்து போவதற்கும்
அதை செய்வதற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

கருத்துரையிடுக