#கோவையில்_புலம்பெயர்ந்த #தொழிலாளர்கள்_மீதான_தாக்குதல் : #CPIML_தலையீடு!

மாவட்ட செயலாளர் அறிக்கையிலிருந்து:-
இன்று காலையில் கோவை என்.ஜி.ஜி.ஒ காலனியில் இருந்து இடிகரை செல்லும் ரோட்டில் இருக்கும் கார்ட்டுவெல் ஸ்பின்னிங் மில்லில் பனிபுரியும் பீகார் மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் மில்லின் நுழைவாயிலின் முன்பு (மெயின் ரோடு) எந்த விரிப்பும் இல்லாமல் தூங்கி கொண்டிருந்தார்கள்.
அந்த வழியே வந்த நான், அவர்களிடம் 'எதற்கு இங்கு படுத்திருக்கீறீர்கள்?' என விசாரித்தேன். "நாங்கள் பல நாட்களாக ஊருக்கு அனுப்புங்கள் என்று நிர்வாகத்திடம் கேட்டும் நிர்வாகம் ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை; எங்களை வெளிய செல்லவும் அனுமதிக்க முடியாது என்று கூறியதால், கோவையிலிருந்து ரெயில்கள் விடப்படுவதாக அறிந்து, நாங்களாகவே மில்லில் இருந்து வெளியேறி கோவை ரயில் நிலையம் சென்றோம். அங்கு அதிகாரிகளிடம் விசாரித்ததில் ரயில் எதுவும் இல்லை என்று கூறி விட்டனர். எனவே, நாங்கள் திரும்பி மில்லுக்கே வந்து விட்டோம். நிர்வாகம் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, ஆதலால் ரோட்டிலேயே படுத்துவிட்டோம்" என்று கூறினார்கள்.
விசாரித்து கொண்டிருக்கும் போது நிர்வாக தரப்பில் இருந்து நான்குபேர் என்னிடம் வந்து, யார் நீங்கள் என்று விசாரித்து விட்டு 'மேலாளரிடம் பேசுங்கள்' என்று கைபேசியை கொடுத்தார்கள். மேலாளர் இடம் பேசினேன்.
அதற்கு அவர் காலை 10-க்கு உள்ளே அனுமதிப்பதாக கூறினார். அவரிடம் முதலில் தொழிலாளர்களை உள்ளே அனுமதித்து காலை கடன்கள் கழிக்க, மற்றும் உணவு எற்பாடு செய்யுங்கள் என்று வலியுறுத்தினேன். இப்படி அவர்களை புறக்கணிப்பது "தவறு மற்றும் குற்றம்" என சுட்டிக் காட்டியபிறகு உள்ளே அனுமதித்தனர்.
அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடமும் பேசி அவர்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி கூறினேன். ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்...
-பாலசுப்ரமணியன், கோவை.