களத்தில் RYA இளம் தோழர்கள் - கடலூர்
மே 16, 2020 கோரிக்கை நாள்
புரட்சிகர இளைஞர் கழகம்(RYA) சார்பில் 16/05/2020 இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் கோரிக்கைகள் நாளாக அனுசரிக்கப்பட்டது.
புரட்சிகர இளைஞர் கழகம்(RYA) சார்பில் 16/05/2020 இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் கோரிக்கைகள் நாளாக அனுசரிக்கப்பட்டது.
மாவட்டம்:- கடலூர்
கோரிக்கைகள்
✓ நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் அணைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!
✓ சட்ட கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற அரசின் முடிவை திரும்பப்பெற வேண்டும்!
✓ நீட் உள்ளிட்ட அணைத்து விதமான மாணவர் விரோத நுழைவு தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
✓ CAA, NRC, NPR-க்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் போராடிய ஜாமியா மிலியா, JNU மற்றும் DU பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள UAPA உள்ளிட்ட அணைத்து வழக்குகளையும் ரத்து செய்!
✓ முழு முடக்கத்தால் வேலையின்றி, வருமாணமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள அணைத்து இளைஞர்களுக்கும் நிவாரணமாக ரூ.10,000 உடனே வழங்கு!
✓ சமூகத்தை சீரழிக்கும் (டாஸ்மாக்) சாராய கடைகளை நிரந்தரமாக மூடு!
✓ பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவா!
போன்ற கோரிக்கைகளை வலியுத்தி மாவட்டம் முழுவதும் கோரிக்கை பதாகைகளுடன் தனிமனித இடைவெளிக்கு உட்பட்டு போராட்டங்களை அவரவர் வீட்டிலிருந்தபடி நடத்தப்பட்டது...

கருத்துரையிடுக