தோழர் இ.எம்.எஸ். அவர்களின் 111 வது பிறந்த நாள் இன்று .. (13.06.2020)

தோழர் இ.எம்.எஸ். அவர்களின் 111 வது பிறந்த நாள் இன்று .. (13.06.2020)
தோழர் ஏலங்குளம் மனக்கல் சங்கரன்
ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்;
துவக்கத்தில் பழுத்த காந்தியவாதி...
காலப்போக்கில் தன்னுடைய சிந்தனையையும் செயல்பாட்டையும் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைத்துக்கொண்டவர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே பரிணமித்துத்துக்கொண்டும் சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்டும் தான் கற்றதை பல தலைமுறைகளுக்கும் கற்பித்த மார்க்சிய ஆசான் தோழர் இ.எம்.எஸ்.
மார்க்சுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் இந்திய சமூகத்தை குறித்தான புரிதல் இல்லையென எழுந்த பொதுவான குற்றச்சாட்டுகள் மீது வலுவான பதிலடியை தந்தவர் தோழர் இ.எம்.எஸ்....
இந்திய வரலாற்றை எழுதியவர்களை பொதுவாய் இரண்டு பிரிவாய் பிரித்து விடலாம் , ஒரு பிரிவு இந்தியாவின் மீதான ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்தி ஆதரித்தவர்களை கொண்டது . இன்னொரு கூட்டமோ ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை பரிவுடன் அணுகியவர்களை கொண்டது.
ஆனால் இதையெல்லாம் கடந்து இந்திய வரலாற்றை வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் துள்ளியமாய் மதிப்பிட்டவர்களில் முதன்மையானவர் தோழர் இ.எம்.எஸ்...
இந்த மண்ணில் ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான போராட்டங்களையும் அதனை வழிநடத்தி சென்றவர்களையும் மிக ஆழமாய் புரிந்துகொண்டு அதை மீட்டுருவாக்கம் செய்த வரலாற்று ஆசிரியர்...
உதாரணத்திற்கு , 1857 ல் நடந்த சிப்பாய் கலகத்தை தோழர் இ.எம்.எஸ் அவருடைய பாணியிலேயே அணுகுகிறார்...
அவருடைய வரிகளில் சொல்வதானால் ,
" •இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்ற கழகங்களில் விரிவான அளவிலும் உயரிய வடிவத்திலும் நடைபெற்ற ஒரு கலகமாக 1857-ன் எழுச்சி போராட்டம் அமைந்திருந்தது. விரிவான அளவில் நடைபெற்ற அந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஸ் வரலாற்றாளர்கள் பெயர் சூட்டியிருந்தனர்
•இந்தப் போராட்டம் பெருந்திரளான விவசாயிகளும் அவர்களை சுரண்டலுக்குட்படுத்திய நிலப்பிரபுத்துவ தலைவர்களும் இணைந்து நடத்திய உயரிய வடிவப்போராட்டமாக அமைந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு முன்னர் வருண சாதி உறவுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு கிராம சமூகம் இந்தியாவில் வழக்கில் இருந்து வந்தது இந்த கிராம சமூக அமைப்பை பாதுகாக்கவே இக்கலகம் நடத்தப்பட்டது. " என்கிறார்
இப்படித்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்பிருந்த போராட்டங்களையும் அவர் அணுகுகிறார்..
இந்திய தேசிய காங்கிரசு மீதான விமர்சனங்களையும் வலுவாக வைத்திருக்கிறார்.
1947 க்கு பிறகு இந்தியாவில் அவர்தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி
ஜனநாயக முறையில் ஆட்சியை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவிற்கும் மார்க்சியத்திற்குமான மிகப்பெரிய இணைப்பு பாலமாய் செய்ல்பட்டிருக்கிறார்...
மார்க்சியத்தின் தத்துவமும், நடைமுறையும் ஒரு தனி நபரின் வாழ்க்கையோடும், செயலோடும் இணையும்போது எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இஎம்எஸ் தெளிவான ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்.
தோழர் இ.எம்.எஸ் ஸை பற்றி பேசுவதை விடவும் அவரிடமிருந்து கற்க வேண்டியது ஏராளமாய் இருக்கிறது என்பதையும் கற்றதை கற்பித்துக் கொண்டும் ஒவ்வொரு தோழர்களும் அவரை ஒரு முன்மாதிரியாய் நினைவில் வைத்து முன்னேறிச் செல்ல வேண்டிய காலகட்டம் இது...