அலட்சிய எஸ்.ஐ.,க்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!
அலட்சிய எஸ்.ஐ.,க்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!
சென்னை; அலட்சியமாக செயல்பட்ட, எஸ்.ஐ.,க்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- திருச்சி பாலக்கரை பிரதான சாலையை சேர்ந்தவர், செந்தில்குமார்.
இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
- கடந்த, 2017 டிசம்பர், 25ல், நண்பர்கள் சிலருடன், காரில் சபரிமலை சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தேன்.
- வத்தலக்குண்டு அருகே வந்தபோது, கார் விபத்துக்குள்ளானது.
- காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.
- விபத்து குறித்து, அப்போது பணியில் இருந்த வத்தலக்குண்டு, எஸ்.ஐ., வசந்தா விசாரணை நடத்தி, காருக்கு ஏற்பட்ட சேதம் குறித்து சான்றிதழ் வழங்கினார்.
- அதில், விபத்து நடந்த தேதி, டிச., 23 என, தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.
- இந்த தவறை சரி செய்து தரும்படி, எஸ்.ஐ.,யிடம் கேட்ட போது, அவர் அலட்சியமாக பதிலளித்தார்.
- சட்டத்துக்கு உட்பட்டு செயல்படாத, எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த மனுவை விசாரித்த, ஆணையத்தின் தலைவர் துரை ஜெயச்சந்திரன், 'அலட்சியமாக செயல்பட்டு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கு, 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
- இந்த தொகையை, மனுதாரரிடம், நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.06.2020
கருத்துரையிடுக