கடவுளின் தேசத்தில்....தற்கொலை செய்துகொண்ட ஏழை தலித் மாணவி
பினராயி விஜயக் கடவுளின் தேசத்தில்....
#தற்கொலை_செய்துகொண்ட
#ஏழை_தலித்_மாணவி
கேரள மாநிலத்தை சார்ந்த பாலகிருஷ்ணன்-ஷிபா தம்பதியின் மகள் தேவிகா. வீட்டின் கொல்லைப்புறத்தில் அவளது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கேரள அரசு அறிவித்துள்ள ஆன்லைன் வகுப்பின் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் உள்ள அந்த தலித் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவளைக் கொன்றது வேறு யாருமல்ல சகாவு(?) பினராயி விஜயனின் அரசாங்கம்தான்!
கொரானாவின் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு பட்டினியாகவும்,நரகமாகவும் மாறியுள்ள அதேவேளை உயர் வர்க்கங்களுக்கு அது உல்லாசமான ஓய்வுக்காலமாக மாறியுள்ளது. கொரானா இச்சமூகத்தின் மிகக்கொடூரமான சமூக இடைவெளியை அல்லது ஏற்றத்தாழ்வை அன்றாடம் காட்டிக் கொண்டிருக்கிறது.
இத்தகையதொரு சூழலில் பள்ளி கல்லூரிகளை திறக்காமல் ஆன்லைனில் கற்பது என்ற ஒரு வடிவத்தை மைய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றன. உண்மையில் மிகவும் வறுமைப்பட்ட நிலையிலும், அதேபோல தொலைதூர வனப் பகுதிகளிலும் உள்ள ஏழை மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பது என்பது சாத்தியமற்றதாக உள்ளது
இத்தகைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கான ஏற்பாடுகளை செய்து தராமல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுப்பது என்பது ஏழைகளின் கல்வியை முற்றிலும் புறக்கணிப்பதே ஆகும். அவர்களது கல்வி உரிமையை ஊரடங்கைக் காரணம் காட்டி அழிப்பதே ஆகும்.
கேரளாவின் போலி கம்யூனிச, சமூக பாசிசக் கும்பலின் ஆட்சி எந்தவித மூடு திரையும் இன்றி ஆன்லைன் கல்வி என்ற பெயரில் ஏழைகளின் கல்வி உரிமையை பறித்து வருகிறது. அதன் விளைவே இந்த ஏழை தலித் மாணவியின் தற்கொலை ஆகும்.
பினராயி விஜயக் "கடவுளின் தேசத்தில்" ஏழைகள் நரகத்தில் தான் வாழ்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. இதில் கொடுமை என்னவென்றால் இந்த அரசின் படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்கள் மீது கேரள சமூக பாசிச ஆட்சி கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை எதிர்த்து சிபிஎம் இன் மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவிக்கும்.ஆனால் கேரள சிபிஎம் ஆட்சி ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி ஏழை மாணவர்களின் வாழ்வை அழிக்கும். தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கம் ஏழைகளின் கல்வி உரிமையைப் பறிப்பதாக கூறி நீட் தேர்வை எதிர்த்து போராடும் . ஆனால் கேரளாவில் பினராயி விஜயன் அரசு நீட்டை ஆதரித்து, அதை நடைமுறைப்படுத்தும். இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் நயவஞ்சக கபட வேடம். இதற்கு முட்டுக் கொடுக்கவும் ஏராளமான பினராயி விஜயன் விசிறிகள் உள்ளனர்.வாருங்கள் இதற்கு என்ன முட்டுக் கொடுக்கிறீர்கள் என்று பார்க்கலாம்
கருத்துரையிடுக