இந்தி திணிப்பு ஏன் ?
இது அவ்வப்போது நடக்கும் வேடிக்கை விளையாட்டுதான். இந்தி என்ற மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மற்றும் பேசும் மொழியாக இந்திய தேசமெங்கும் இருக்கவேண்டும் என்று மத்திய அரசு பேசுவதும், அதற்கு நம்மவர்கள் சிலர் கொட்டடிப்பதும் நாம் பலமுறை கண்ட அரசியல் நாடகம்தான்.
இன்று அது மீண்டும் கிருஷ்ணசாமி மூலம் அரங்கேற்றப்படுகிறது...
இந்தி திணிப்பு என்பது மேலோட்டமாக பார்த்து கருத்து சொல்லிச் செல்லும் சாதாரண விடயமல்ல. ஆழமான காரணமும் அரசியலும் கொண்ட கருத்தியல் இது..!
தமிழ் மீது மட்டுமல்ல...
இந்தி மட்டுமல்ல...
இந்தி மட்டுமல்ல...
எந்த மொழி பேசும் மக்கள் மீதும் இன்னொரு மொழி திணிக்கப்படுவது (linguistic imperialism) மொழியியல் ஏகாதிபத்தியம். அந்த அடக்குமுறையை நாம் எதிர்க்கிறோம்.
நம் வரையில் தமிழ் மீதான இந்தி திணிப்பை நாம் எதிர்க்க பல காரணங்கள் உண்டு. என்றாலும் இரண்டு முக்கிய காரணங்களை மட்டும் இங்கே பார்ப்போம்...
1. வேலை வாய்ப்பு:
இந்தி கட்டாயாக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தபின், இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் அறிவிக்கப்படும். ஆம், வேடிக்கையல்ல...
எப்படி மராட்டிய மொழியின் தாயகமான மகாராஷ்டிரா இந்தி பேசும் மாநிலமாக மாறிப்போனதோ...
எப்படி ஹர்யன்வி மொழியின் தாயகமான ஹரியானா இந்தி பேசும் மாநிலமாக மாறிப்போனதோ...
எப்படி மஹாஸுய் மொழியின் தாயகமான ஹிமாச்சல பிரதேசம் இந்தி பேசும் மாநிலமாக மாறிப்போனதோ... அதே போன்று.
அது நடைபெற, இந்தி ஆசிரியர்கள் என்று பல்லாயிரம் வடநாட்டவர் தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யப்படுவர். TNPSC தேர்வுகளில் தமிழர் அல்லாதவரும் பங்கேற்க தற்போதைய தமிழக அரசு அனுமதித்தபின் எத்தனை ஆயிரம் வேலைகளில் வடநாட்டவர் பணியில் அமர்த்தப்பட்டனர் என்பதை பத்திரிகைகள் மூலம் நீங்களே படித்திருப்பீர்கள்.
சென்னையில் தமிழில் முகவரி எழுதப்பட்ட கடித்தத்தை வாங்க மறுத்த வடநாட்டு தபால்துறை ஊழியரை பணியில் அமர்த்திய அராஜக செயல்பாடுகள் இன்னும் பல மடங்கு பெருகும், இந்தி கட்டாயப் பாடமாக்கிய பின்னர்.
மின்சாரத்துறை, வங்கி, ரயில்வே என்று துவங்கியிருக்கும் இந்த இறக்குமதி பல்கிப் பெருகி, அரசு வாகன ஓட்டுனர் பணிகள் வரைக்கும் வடநாட்டவர் கைவசம் போகக்கூடும். ஏற்கனவே நிம்மதியும், வாழ்க்கை வசதியும் இல்லாத பல வடமாநிலத்தவர் தமிழகம் நோக்கி சந்தோசமாகவே படையெடுப்பர்.
ஏற்கனவே இங்கு இருப்பில் இருக்கும் வேலை வாய்ப்பின்மை இன்னும் தாறுமாறாக எகிறும்.
ஆனால்... இதைவிட ஆழமானதும், அநியாயமானதும், நான் சொல்லப்போகும் இரண்டாவது காரணம்.
2. சமூக ஏற்றத்தாழ்வு.
சுதந்திரத்துக்குப்பின் குலக்கல்வியை நம் சமுதாயத்தில் புகுத்த முனைந்த கட்சியை துரத்தியடித்த நாடு, தமிழ்நாடு.
சாதியின் பிடியில் சிக்கித் தவித்து, சமுதாய ஏற்றத்தாழ்வோடு ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகள் வாழ்ந்திருந்த தமிழர்களை, கொஞ்சமேனும் அந்த அவலத்திலிருந்து விடுவித்தது, அவர்களுக்கு அளிப்பட்ட கல்வி.
இன்று பல்லாயிரக்கணக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு பணிகளிலும் இருக்க காரணம், சென்ற பல ஆண்டுகளாக அவர்களுக்கு கிடைத்த கல்வி.
இந்த கல்வி என்ற ஆயுதம் தந்த பலம்தான் தாழ்த்தப்பட்ட சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்டு, சூத்திர முத்திரை குத்தப்பட்டு, சமூக அடுக்கின் அடித்தளத்தில் புதைக்கப்பட்டிருந்த நம் சகோதர சகோதரிகள் கொஞ்மேனும் தலைநிமிர்ந்து சுய மரியாதையோடு வாழ வழிசெய்தது, இல்லையா...?
இதை ஒழித்துக்கட்டி, அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கே அனுப்பும் நூதன பாசிச சனாதன அணுகுமுறைதான் இந்த இந்தி திணிப்பு.
எப்படி என்கிறீர்களா...?
இதை எழுதும் நானும், படிக்கும் தோழமைகளில் பலரும், சிறு அல்லது பெருநகரங்களில் வாழ்கிறோம். நம்முடைய தொழில் மற்றும் வர்த்தக மொழிகூட தமிழ் அல்லாத வேறொரு மொழியாக இருக்கக்கூடும்.
ஆனால் தமிழக கிராமங்களில், அதுவும் சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களின் நிலைமை என்ன...? அங்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியாவது வழக்கில் இருக்குமா..? அப்படியான கிராமத்திலும் இந்தி கட்டாயப் பாடமாக அரசு ஆணையின் பலத்தோடு பள்ளிகளில் திணிக்கப்படும்போது நிலைமை என்னவாகும்..?
ஒரு வகுப்பில் "பாஸ்" ஆவதென்பது அந்த வகுப்பின் எல்லா பாடங்களிலும் பாஸ் ஆவதுதானே, இல்லையா..? இந்த சின்ன கிராமங்களின் பள்ளியில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுவர்..?
ஆக... ஆரம்ப பள்ளியிலேயே பெயில் ஆகிப்போய், மேலே படிக்க வாய்ப்பு மறுக்கப்படும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்..?
பனை ஏறுபவரின் மக்கள்
பனை ஏறவும்...
பனை ஏறவும்...
மாடு மேய்ப்பவரின் மக்கள்
மாடு மேய்க்கவும்...
மாடு மேய்க்கவும்...
மலம் அள்ளுபவரின் மக்கள்
மலம் அள்ளவும்...
மலம் அள்ளவும்...
செருப்பு தைப்பவரின் மக்கள்
செருப்பு தைக்கவும்...
தானே செல்ல வேண்டி வரும்.
செருப்பு தைக்கவும்...
தானே செல்ல வேண்டி வரும்.
இது தான் இந்த இந்தி மொழித் திணிப்பின் இறுதி இலக்கு. இந்த அழிச்சாட்டியம் நடந்துவிடாமல் தடுக்கத்தான் பல உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு நம் சமுதாயம் இந்தி திணிப்பை எதிர்த்து பல தசாப்ததங்களாக போராடி வருகிறது. இனியும் தொடர்ந்து போராடும்...!
நீட் தேர்வை விடவும் படு பயங்கரமான ஆபத்து இது.
இந்தி திணிப்புக்கு ஆதரவளித்து விவாதிக்கும் உங்கள் நன்பர்களிடம் இந்த கேள்விகளை கேளுங்கள்...!
சனாதனத்தின் உச்ச அடுக்கில் உல்லாசமாக அமர்ந்திருப்பவர்களுக்கு இது தெரியும், புரியும். ஆனால் அவர்களின் மத-சாதி வெறி அரசியலால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான நம் சகோதர சகோதரிகளுக்கு இது புரியாது.
"இன்னொரு மொழி படித்தால் என்ன தவறு" என்று மேலோட்டமாக கேட்கவும் யோசிக்கவுமே அவர்கள் கற்று கொடுக்கப்பட்டு உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
பொறுமையாகவும் புரியும்படியும் இந்தி திணிப்பின் இறுதி இலக்கை விளக்குங்கள்.
நாம் இந்தி என்றல்ல, எந்த மொழிக்கும் எதிரியல்ல. ஆனால் திணிக்கப்படும் மொழிக்கு மட்டுமே எதிரிகள் என்பதை விளக்குவோம்.
தோழமையுடன்,
Fazil Freeman Ali
Fazil Freeman Ali
கருத்துரையிடுக