அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்ட முடிவுகள்:-
அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்ட முடிவுகள்:-
27 ஏப்ரல் 2020 முதல் 3 மே 2020 வரையிலான கோரிக்கை வார பிரச்சார நிகழ்ச்சிகளிலும் மற்றும் மேதின பிரச்சார நிகழ்ச்சிகளிலும் பெருமளவு கலந்துகொண்ட கட்டிட தொழிலாளர்களை இந்த கூட்டம் பாராட்டியது.
பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர்களின் மீதான காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலை அகில இந்திய கட்டிட தொழிலாளர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது மேலும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது பல மாநிலங்களிலும் போடப்பட்ட பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட காவல்துறை வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறது.
தொழிற்சங்க ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை இந்த கூட்டம் கண்டிக்கிறது.
75 நாட்கள் முடக்கம் மற்றும் தளர்வு-1 க்கு பிறகும் கட்டிட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை என்பதை இந்த கூட்டம் தீவிரமாக கவனத்தில் கொள்கிறது. சில மாநில அரசாங்கங்கள் கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து வழங்கிய நிவாரண நிதியும் போதுமானதல்ல, மேலும் பல்வேறு மாநிலங்கள் இதுவரை ஒரு நயா பைசா கூட நிவாரணமாக அறிவிக்கவில்லை.
இந்த முறை நாம் நமது செயலூக்கமிக்க நிகழ்ச்சிகளின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு கூடுதலான நிவாரணங்களை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த மற்றும் சொந்த ஊரிலுள்ள கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் மேலும் பலர் நீடித்த முடக்கத்தின் காரணமாக உணவு பெறுவதற்கு வழி ஏதுமின்றி தவிக்கின்றனர்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மற்றும் கொரோனாவை எதிர்க்க அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலுக்காக AICWF கோருகிறது:-
✓ ஒவ்வொரு பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.
✓ அனைத்து பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் அவர்களின் வீட்டு வாசலில் இலவச உணவு பொருட்களை வழங்க வேண்டும்.
✓ அனைத்து புலம்பெயர் மற்றும் சொந்த ஊரிலுள்ள தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய சொந்த ஊர்களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வேறு மாநிலத்தில் உள்ள வேலை இடங்களில் அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய உறுதி செய்ய வேண்டும்.
கோரிக்கைகள் மாநில அமைப்புகள், மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று அல்லது இரண்டு முக்கிய கோரிக்கைகளை இணைத்துக் கொண்டு அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
செயலுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் முழு உற்சாகத்துடனும் போராட்ட குணத்துடனும் நிறைவேற்ற கட்டுமான தொழிலாளர்கள், முடக்ககால விதிமுறைகள் மற்றும் தனிநபர் இடைவெளியை கவனத்தில் கொண்டு நிறைவேற்றவேண்டும்.
S.K.சர்மா
பொதுச் செயலாளர்.
பொதுச் செயலாளர்.
கருத்துரையிடுக