செக்ஸ் மாஃபியாக்களும் ஆயுதப்போராட்ட வழிமுறையைக் கொண்ட அமைப்பை சார்ந்தவர்களும் இணைந்து மிரட்டல் - திருப்பூர் குணா

#செக்ஸ்_மாஃபியாக்களும் #ஆயுதப்போராட்ட_வழிமுறையைக்_கொண்ட_அமைப்பை_சார்ந்தவர்களும் #இணைந்து_மிரட்டல்! சமீபத்தில் 13 வயது பெண் குழந்தையை இழுத்துக்கொண்டு ஆண்களும் பெண்களுமாக ஒரு கும்பல் பாண்டிச்சேரியில் கும்பல் பாலுறவு வன்முறையை நிகழ்த்தியதாக ஒரு செய்தியை பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர் இணையத்தில் தெரியப்படுத்தினார். இதற்கு அடுத்தநாள் "இது எப்படி வெளியே தெரிந்தது? உங்களில் யார் சொன்னது?" என்று பாலுறவு வன்முறைக் கும்பலை சார்ந்த மூன்றுபேர் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோதான் மேற்கண்ட கொடுஞ்செயல் நடந்ததை உறுதிபடுத்துகிறது.

ஆடியோவில் "யார் வெளியே சொன்னது?" என்று விசாரணை நடத்திய பெண்தான் கும்பலாக பாலுறவு வன்முறையில் ஈடுபடுகிறவர்களின் தலைவி போலும். இவர் ஒரு ட்ராட்ஸ்கிய அமைப்பை சார்ந்தவர். இங்குள்ள ட்ராட்ஸ்கிய அமைப்புக்கும் செக்ஸ் சாமியார் ஓஷோவின் அமைப்புக்கும் இருக்கும் உறவு குறித்து தனியாக பேசவேண்டும்.

கும்பல் பாலுறவு வன்முறையாளர்களின் தலைவியோடு ஆயுதப்போராட்ட வழிமுறையைக் கொண்ட அமைப்பின் இந்நாள் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர் எல்லாவகை உறவுகளும் வைத்துள்ளனர். ஆடியோவில் இவரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவரும் மேற்காணும் அமைப்பை சார்ந்தவர்தான். மட்டுமல்லாது மேற்காண் அமைப்புக்கு ஆதரவாக கொஞ்ச காலம் முன்புவரை கோவையில் மக்கள் விடுதலையின் பேரில் ஒரு இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும் இப்போதுவரை ஆயுதப்போராட்ட வழிமுறையைக் கொண்ட அமைப்போடு உறவில் இருப்பவருமான ஒருவரின் துணைவியார் கும்பல் பாலுறவு வன்முறையாளர்களின் தலைவியோடு இணைந்து செயல்படுகிறவர். துணைவியாருடைய செயலுக்கு கணவர் கொள்கை ரீதியாக ஆதரவளித்து வருகிறார்.

ஆக, கும்பல் பாலுறவு வன்முறையாளர்களோடு இணைந்து ஆயுதப்போராட்ட வழிமுறையைக் கொண்ட அமைப்பை சார்ந்த சிலர் செயல்படுகின்றனர்.

இந்த கூட்டு கும்பல்தான் என்னையும் ஜீவாவையும் குறிவைத்திருக்கிறது. இவர்கள் பெண்கள் மூலமாக முக்கியமான தலித் இயக்கத்தை சார்ந்த சிலரை அணுகி எங்களை மிரட்டுகிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், இவர்களின் கொடூரங்களை வெளியிட்டு வரும் தோழர் தமிழச்சிக்கு நாங்கள்தான் செய்திகள் சேகரித்து தருகிறோம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

எங்களது கேள்வி என்னவென்றால், நாங்கள் ஏன் இதுமாதிரியான செய்தியை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும்? அதை நாங்களே எழுதுவோமே. பின்நவீனத்துவ கேடுகளை, அது இயக்கங்களுக்குள் பரப்பிய பாலியல் சீர்கேடுகளை தொடர்ந்து எழுதிவருகிறோமே! அதை புத்தகங்களாகவும் கொண்டு வந்துள்ளோமே!

பயமாக இருக்கலாம் என்று எண்ணுகிறார்களோ? ஆளும்வர்க்கங்களை, ஆட்சியாளர்களை, RSS - ஐ, மோடியை விமர்சித்து, எதிர்த்து வெளியீடுகளை கொண்டுவரும் எங்களுக்கு இவர்களைப் பார்த்து என்ன பயம்?

இருக்கட்டும். உங்கள் விருப்பத்தின் பேரில் இன்று முதல் எழுதுகிறேன். இதை எழுதாமல் எதை எழுதுவது? 

மக்கள் பிரச்சினைக்காக ஒன்றிணையாத இயக்கங்களை, இயக்கங்கள் சார்ந்தவர்களை கும்பல் பாலுறவு கொள்கை இணைத்திருப்பதை எழுதாமல் எதை எழுதுவது?

பின்நவீனத்துவம் ஏற்படுத்திய பாலியல் சீரழிவுக் கலாச்சாரம் இன்னும் இந்த ஆயுதப்போராட்ட வழிமுறையைக் கொண்ட அமைப்பை அரித்துக்கொண்டிருப்பதை எழுதாமல் எதை எழுதுவது?

விபரமாக, வெளிப்படையாக, ஆட்கள், இயக்கங்கள் எல்லாவற்றையும் பேர் சகிதம் எழுதுகிறேன். உங்களால் தாக்கப்படும்போது உண்மை என்னவென்று உலகறிய எழுதுகிறேன். சந்திப்போம்!

- தோழர் திருப்பூர் குணா