எமர்ஜென்சி
பாசிசத்தை பற்றி அல்லது சர்வாதிகாரத்தை பற்றி, கொடுங்கோன்மை பற்றி நாமெல்லாம் பேசுவதைவிட இந்திரா காந்தி அம்மையாருக்கு பண்டிதர் நேரு அவர்கள் டேராடூன் சிறைச்சாலையின் கைதியாக இருந்த நேரத்தில் எழுதிய கடிதங்கள் "என்னுடைய அன்புள்ள இந்திரா பிரியதர்ஷினிக்கு" என்ற தலைப்பிட்டு 1933ஆம் ஆண்டிலிருந்து எழுதிய 200க்கும் மேற்பட்ட கடிதங்கள் உலக சரித்திரம் என்கிற பெரிய புத்தகமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
நான் அந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை படித்துக் காட்ட விரும்புகிறேன். நீயே தமிழாக்கம் செய்து இருப்பாய் என்று யாராவது கேட்கக் கூடும். ஓ.வி. அளகேசன் அவர்கள் மொழிபெயர்த்த புத்தகம். அதிலே பாசிசத்தை பற்றி நேரு அவர்கள் இந்திராகாந்திக்கு எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை படிக்கிறேன்.
"முதலாளிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு முசோலினி அதே நேரத்தில் முதலாளித்துவத்திற்கு விரோதமான பல கோஷங்களை கிளப்பினான். ஆகவே ஒன்றுமறியாத ஏழைகளும் பாசிஸ்டுகளின்பால் ஈர்க்கப்பட்டார்கள். மேலும் அரசாங்கத்திற்கு விரோதமாக கிளர்ச்சி செய்கிற வித்தையை கம்யூனிஸ்டுகளிடமிருந்து முசோலினி கற்றிருந்தான்(சிந்தன் கோபித்துக் கொள்ளக்கூடாது) இவ்வாறு பாசிசம் என்பது ஒரு விசித்திர கதம்பமாக விளங்கியது" என்று நேரு எழுதியிருக்கிறார்.
அதாவது ஒரு பக்கத்தில் முதலாளித்துவத்திற்கு ஆதரவு; இன்னொரு பக்கத்தில் ஏழைகளை பற்றிய பேச்சு; இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தை எதிர்க்க கம்யூனிச முறை; இதுதான் பாசிசம் என்கிறார் பண்டித நேரு.
அமெரிக்காவிற்கு சென்ற நம்முடைய இனிய நண்பர் எம்ஜிஆர் அவர்களே அண்ணாயிசம் என்றால் என்ன என்று கேட்டார்கள்
"கேப்பிட்டலிசம், கம்யூனிசம், சோஷலிசம் ஆக இந்த மூன்றும் சேர்ந்துதான் அண்ணாயிசம்" என்றார்.
அடப்பாவி நேருவினுடைய இந்த விளக்கத்தை படித்த பிறகு அண்ணாயிசம் என்றால் பாசிசம் என்றல்லவா அர்த்தம் ஆகிறது? அதுவா அண்ணாயிசம்? பாசிசமா அண்ணாயிசம்? கேப்பிட்டலிசம், சோஷலிசம், கம்யூனிசம் இந்த மூன்றையும் போட்டு குழப்புவது பாசிசம். இன்றைக்கு எம்ஜிஆர் ஆதரிக்கின்ற இந்திராகாந்தியின் தந்தை எழுதியிருக்கிற கடிதத்தில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற தெளிவான விளக்கம் இது. ஆகவே மூன்றையும் போட்டு குழப்பி ஒரு தெளிவற்ற தன்மையிலே இருக்கிற கொள்கை பாசிசம்; அதையே இன்றைக்கு அமெரிக்கா வரை பொய் சொல்லி,அண்ணா அவர்களின் அருமையான ஜனநாயக கொள்கைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் இது மூன்றும் தான் அண்ணாஎன்று கூறி, அண்ணா அவர்களை தேவையில்லாமல் பாசிச வாதியாக ஆக்கியவரை நாடு மன்னிக்குமா? (மன்னிக்காது, மன்னிக்காது)..

- பெரியார் திடலில் நடந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டில் கலைஞரின் உரை
21-11-75(முரசொலி)
21-11-75(முரசொலி)
(கேலிச்சித்திரம்: ஜூன் 8, 1975, முரசொலியில் வெளிவந்தது)
கருத்துரையிடுக