தமிழகத்தின் வேலை தமிழருக்கே
பிற மாநிலங்களில் அந்த மண்ணின் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமை தனிசட்டம் இயற்றி இருக்கும் போது....
தமிழகத்தின் வேலை தமிழருக்கே என்று முழங்குவது எப்படி பிரிவினை வாதமாகும்.....
அரசமைப்பு உறுப்பு 371-A சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டு உள் அனுமதி சீட்டு இல்லாமல் பிற மாநிலத்தவர் இம்மாநிலத்தில் பயணம் செய்ய கூட முடியாது. நாகாலாந்து அரசு பணிகள் அந்த அலுவலகங்கள் அமைந்துள்ள மாவட்ட மக்களை கொண்டே நிரப்பப்படுகிறது.
சத்தீஸ்கர் அரசு கல்வி நிலையங்களில் 100%, தனியார் நிறுவனங்களில் 75% அம்மாநில மக்களுக்கே என அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணை எண் (No./f 9-5/2017/tech.edu./42/dated/22.03.2017).
சத்தீஸ்கர் அரசின் மாநில தொழிற்துறை (Industrial policy 2014-2019) 33-90% மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கே சலுகை அளிக்கிறது.
அரசமைப்பு உறுப்பு 370, 35 A சிறப்பு அதிகாரம் படி பிற மாநிலத்தவர் சொத்து வாங்கவோ நிலங்களை நீண்ட கால குத்தகை எடுக்கவோ முடியாது.
1954 மே 14 அங்கு இருந்தவர்கள் மட்டுமே அம்மாநில குடிகளாக வரையறுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே வேலை பெற முடியும் என சட்டம் உள்ளது.
தொழிலாளர் நலனுக்காக 1966 ல் இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேசிய தொழிலாளர் ஆணையம் 1969 ஆகஸ்டு தனது முதல் அறிக்கையில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என அறிவித்தது.
தமிழகத்தின் வேலை தமிழருக்கே என்று போராட்டத்தையும் மற்றும் முழக்கத்தையும் முன்னெடுக்கும் அண்ணன் வேல்முருகனோடு கரம் கோர்ப்போம்....
இவண்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கருத்துரையிடுக