கலவரம் செய்ய துடிக்கும் - நா.த.க & இந்து மகா சபா
தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சிக்கு மேற்காக செட்டிகுளம் சிவசைலம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய கடையம் ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சம்பன் குளம்!
இந்த அழகிய கிராமத்தில் நூற்று அறுபது முஸ்லிம்கள் குடும்பங்களையும் சேர்த்து சுமார் ஐநூறு குடும்பங்கள் வாழ்கிறார்கள்!
இங்கே எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அவரவரும் அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள்!
தனிநபர் பட்டா பெறப்பட்ட நிலத்தில் ஸ்ரீ பச்சத்துமாடசாமி திருக்கோவில் கட்டப்பட்டு வழிபட்டு வந்து இருக்கிறார்கள்!
சம்பன் குளத்தில் உள்ள ஸ்ரீ பச்சத்துமாடசாமி திருக்கோவிலை விரிவுபடுத்துவதற்காக புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து தடுப்பு சுவர் கட்டி இருக்கிறார்கள்!
தகவல் அறிந்த அரசு தரப்பில் வந்து பார்வையிட்டு புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருக்கிறது இது சட்டப்படி தவறு என்று கூறி விட்டு பட்டா நிலத்தில் உள்ள கோவிலையும் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவரையும் இடித்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் காவல் துறை உதவியுடன்!
இது தான் சம்பன் குளம் கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவம்!
இவ்விசயம் கேள்விப்பட்ட இந்து மகா சபை பிரச்சனையை கையில் எடுத்து மதப் பிரச்சனையாக மாற்றுவதற்காக அவதூறு செய்திகளை பரப்பி இருக்கிறார்கள்!
அதவாது சம்பன் குளம் கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள் அந்த கிராமத்தின் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்லிம் அவரின் தூண்டுதலின் பேரில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபுபக்கர் உதவியுடன் புகார் கொடுத்து திருக்கோவிலை இடித்து விட்டார்கள் என்ற பொய்யான தகவலை பரப்பி இருக்கிறார்கள்!
ஆனால் நடந்தது வேறு இவர்கள் சொல்வது வேறு புறம்போக்கு நிலத்தில் தடுப்பு சுவர் கட்டியதற்காகவே அரசு தரப்பு சார்பாக பார்வையிட்டு திருக்கோவிலை இடித்து இருக்கிறார்கள்!
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மனு கொடுக்கப்பட்டு பட்டா நிலத்தில் கோவில் கட்டிக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது சம்பன் குளம் கிராமம் சார்பாக முஸ்லிம்களும் திருக்கோவில் கட்டுவதற்கு நிதியுதவி செய்வதாக அறிவித்து பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கிறது!
முஸ்லிம்களை சாடுவதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் பாசிச சங்கிகளும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்களும் ஒன்றினைந்து முஸ்லிம்கள் மீது கலங்கம் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வலைதளங்களில் கட்டுக்கடங்காத அவதூறு செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கிறார்கள்!
சிந்திக்கும் திறன் சிறிதும் இல்லாத நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் பலரும் அவதூறுகளுக்கு முட்டுக் கொடுத்து உண்மையை அறிய முயலாமல் சாடிக் கொண்டு இருக்கிறார்கள்!
பாசிச இந்துத்துவ சக்திகளிடம் கை கோர்த்து பெரும் கலவரம் செய்ய முயன்று அதில் மிகப் பெரும் தோல்வியை சந்தித்து உள்ளனர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள்!
அவ்வூர் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் அரசு தரப்பு செய்த தவறை முஸ்லிம்கள் மீது போடவில்லை இதற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை கூறுகிறார்கள்!
பாசிச இந்துத்துவ சக்திகளின் கரங்களை வழுப்படுத்த இணைந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்களின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது இறுதியான தகவல்!
பொய்களையும் அவதூறுகளையும் வதந்திகளையும் தொடர்ந்து பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்!
திட்டமிட்டு முஸ்லிம்களின் மீது அவதூறு பரப்பும் சங்கிகளும் நாம் தமிழர் கட்சியும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் பாசிச நயவஞ்சகர்கள் என்பதை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்!
நன்றி! Mohammed Mydeen
கருத்துரையிடுக