இன‌வெறி_ஒழியுமா..?

இன‌வெறி_ஒழியுமா..?

 வெள்ளை கார்கள் கருப்பு டயர்களைப் பயன்படுத்தும் வரை இனவெறி ஒருபோதும் ஒழியாது... மக்கள் கறுப்பு நிறத்தை கெட்ட ச‌குண‌மாக‌வும், வெள்ளை நிறத்தை அமைதிக்கான‌துமாக‌ அடையாள‌ப்ப‌டுத்தும்வ‌ரை இனவெறி ஒருபோதும் ஒழியாது... மக்கள் திருமணங்களுக்கு வெள்ளை ஆடைகளையும் சாவுக்கு கருப்பு ஆடைகளையும் அணியும்வ‌ரை இனவெறி ஒருபோதும் ஒழியாது... த‌டுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் க‌ண்காணிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை "க‌றுப்பு லிஸ்ட்" (black list) என்று பட்டியலிட‌ப்ப‌டும்வ‌ரை இனவெறி ஒருபோதும் ஒழியாது... ஸ்னூக்கர் விளையாடும்போது கூட‌ நீங்கள் கருப்பு பந்தை அடித்து குழியில் வீழ்த்தும்வ‌ரை நீங்கள் வென்றிட‌வில்லை, அதேவேளை வெள்ளை பந்து தொடர்ந்து டேபிளிலேயே இருக்க வேண்டும் என்று நிற‌ம் சார்ந்த உள‌விய‌ல் க‌ல‌ந்து விளையாடும்வ‌ரை இனவெறி ஒருபோதும் ஒழியாது... ஆனால் நான் இதைப்ப‌ற்றி எல்லாம் பெரிதாக‌ கவலைப்படவில்லை, ஏனென்றால் என் கறுத்த‌ பிட்ட‌த்தை துடைக்க நான் இன்னும் வெள்ளை கழிப்பறை காகிதத்தைத்தான் பயன்படுத்துகிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... - முன்னாள் ஜிம்பாப்வே அதிப‌ர் ராபர்ட் முகாபே (ந‌கைச்சுவையோடு முடித்தாலும் ஒரு க‌றுத்த‌ ம‌னித‌ரின் க‌ருத்தான‌ பேச்சு..)