மகன் கர்ப்பம் சுமக்கிறான் என்னை - ஆண்டாள் ப்ரியதர்சினி
அரும்பத் துவங்கியிருக்கும்
முதல் மீசையிலிருந்து
சொட்டுகிறது இன்னமும்
பால்வாசம்
முதல் மீசையிலிருந்து
சொட்டுகிறது இன்னமும்
பால்வாசம்
இப்போதும் அறுபடாத
தொப்புள் கொடியுடன்தான்
உலவுகிறான்
உடையும் விளிம்பிலிருக்கும்
குரலுடன்
தொப்புள் கொடியுடன்தான்
உலவுகிறான்
உடையும் விளிம்பிலிருக்கும்
குரலுடன்
எனது அடி வயிற்றுச் சூடு தேடிய
அவனின் நேற்றுகள்
இன்று நிறைந்திருக்கின்றன
ஆண்மைப் புதிர்களால்
அவனின் நேற்றுகள்
இன்று நிறைந்திருக்கின்றன
ஆண்மைப் புதிர்களால்
ஆண் உலகில்
இடம் தேடிப் புறப்பட்டதால்
எப்போதாவது நிகழ்கிறது
தாய் ஸ்பரிசம்
இடம் தேடிப் புறப்பட்டதால்
எப்போதாவது நிகழ்கிறது
தாய் ஸ்பரிசம்
வலி போச்சாம்மா
அவனின் மடிச்சுகத்தில்
கரைகின்றன
வலியின் மூலக் கூறுகள்
அவனின் மடிச்சுகத்தில்
கரைகின்றன
வலியின் மூலக் கூறுகள்
தாயைத் தேடியவனிடம்
தேடுகிறேன் தாயுமானவனை
தேடுகிறேன் தாயுமானவனை
இப்போதெல்லாம்
எனக்கு வருகிறது உயிரோட்டம்
மகனிடமிருந்து
எனக்கு வருகிறது உயிரோட்டம்
மகனிடமிருந்து
மகன் கர்ப்பம் சுமக்கிறான் என்னை
கருத்துரையிடுக