இட ஒதுக்கீட்டின் தந்தை *சத்ரபதி* *சாகு* *மகாராஜா* அவர்களின் பிறந்த தினம் இன்று..!

இட ஒதுக்கீட்டின் தந்தை *சத்ரபதி* *சாகு* *மகாராஜா* அவர்களின் பிறந்த தினம் இன்று..!
*1902* -ஆம் ஆண்டு *ஜூலை* *26* ஆம் நாளில் பிராமணரல்லாத, இந்திய நாட்டின் பூர்வகுடி மக்களாகிய *SC* , *ST* , *OBC* மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முதன் முதலில் *50* % சதவிகித *இட* *ஒதுக்கீடு* வழங்கி அதை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாமன்னர் *சத்ரபதி* *சாகு* *மகாராஜா* அவர்களின் நினைவு தினமான இன்று அவரை நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம்.
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் *மேற்படிப்புக்காக*
*நிதி* *உதவி* செய்தவர் இவர்தான். சத்ரபதி சாகு மகாராஜா அவர்கள் *1920* *மார்ச்* - *21* இல் கோலாப்பூரில் உள்ள “ *மாங்கோன்* ” என்ற இடத்தில் நடைபெற்ற மகர் மாநாட்டில்
இவர்தான்(அம்பேத்கர்) *உங்களின்* *அடிமைச்* *சங்கிலிகளை* அறுத்தெறிய வந்திருக்கும் ஒப்பற்ற தலைவர் என *பாபாசாகேப்* *அம்பேத்கர்* அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
*சாகு* *மகாராஜா* அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் எதிர்காலத்தில் “ *Dr.அம்பேத்கர்* தீண்டபடாதவர்களுக்கு மட்டும் தலைவராக இல்லாமல்
இந்தியாவில் உள்ள *அனைத்து* *பிற்படுத்தப்பட்ட* சமூகத்தினருக்கும் தலைவராக விளங்குவார்” என்றார்.
அவரின் மாபெரும் கனவை *30* வருடங்களுக்குப் பிறகு *அனைத்து* *மக்களுக்குமான* *இந்திய*
*அரசியல்* *அமைப்பு* சட்டத்தை எழுதி பாபாசாகேப் அம்பேத்கர் நிறைவேற்றினார்.
" *ஆளும்* *அதிகார* *வர்க்கமாக* இருப்போமானால் *அனைத்து*
*தரப்பு* *மக்களுக்குமான* எந்த உரிமைகளையும் அடைய முடியும்" என்பதற்கு சத்ரபதி
சாகு மகாராஜா அவர்களே முன்னுதாரணமாக இருந்தவர்.
1947 க்குப் பிறகு இந்திய நாட்டை மாறி மாறி ஆண்டவர்கள் இவரைப் பற்றிய வரலாற்றை திட்டமிட்டு *இருட்டடிப்பு* செய்தனர்.
ஆனால், *பகுஜன்* *சமாஜ்* *கட்சியின்* நிறுவனர் மான்யவர் " *திரு.கான்ஷிராம்* " அவர்கள் தான்,
*பாபாசாகேப்* *அம்பேத்கர்* அவர்களால் தன்னுடைய தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் வரிசையில் *மகாத்மா* *ஜோதிபா* *புலேவிற்கு* *பிறகு* வரிசையில்
2-வது தலைவராக "சாகு மகாராஜா" அவர்களை வெளி உலகிற்கு காட்டினார் என்பதை இங்கு யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது..!
*ஜெய்பீம்* ..! *ஜெய்பாரத்* ..!
*BAMCEF* ( Backward classes & Minority Communities Employers Federation)- புதுச்சேரி.
- அலெக்ஸ்,