ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு
தோற்றம்: 13 June 1909
மறைவு: 19 March 1998
Elamkulam Manakkal Sankaran Namboodiripad. இதுதான் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் முழு பெயர்.
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது ஒரு ஏழை கூலித்தொழிலாளி வீட்டு கோழிக்கூட்டில் படுத்துறங்கி, அவர் கொடுத்த கெட்டுப்போன பழைய கஞ்சியும், மத்தி கருவாடும் தின்று பிழைத்த பார்ப்பன நம்பூதிரி இவர்.
தற்போதைய மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த பெரிந்தல் மண்ணா வட்டத்தில் உள்ள ஏலங்குளம் என்ற கிராமத்தில் 1909-ம் ஆண்டு பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார் சங்கரன்.
தமது இளவயதிலேயே நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடியவர். அப்போதைய முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான "வள்ளுவ நாடு யோக சேம சபை"யின் நிர்வாகத்தில் பங்கேற்று, பல சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து, தன் சமுதாய மக்களாலேயே ஒதுக்கப்பட்டவர்.
இவரது கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய விடுதலை இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்திருந்தார். நல்ல எழுத்தாளர், பல இலக்கிய படைப்புகளுக்கு சொந்தக்காரர். கேரள நாட்டின் வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.
1934-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியினுள் ஓர் அங்கமாக சோசலிசக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர். அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார். இக்காலகட்டத்தில்தான் சென்னை மாகாண சட்டசபைக்கும் 1939-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக இருந்த இவர், ஏழைத் தொழிலாளர்களின் நலன் குறித்த தன் ஆழமான கருத்துக்களால் காங்கிரஸோடு கருத்து முரண்பட்டு, பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார்.
கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர். அதற்காகச் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது.
1964-ம் ஆண்டு கட்சி பிளவு பட்டபோது, மார்க்சிய பிரிவுடன் இணைந்தார். அதன் மத்தியக்குழு மற்றும் பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்தவர் 1977-ம் ஆண்டு முதல் 1992 வரை அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தார். அவரது மறைவு வரை கட்சியின் பொலிட்பீரோ அங்கத்தினராக இருந்தார்.
ஈஎமெஸ், இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத அரசியல் வாதிகள் கேரளத்தில் இல்லை எனலாம்.
பனிரெண்டாண்டுகள் தலைமறைவு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறை வாழ்வு என்று தன் வாழ்நாளில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகள் தனிமையில் கழித்தவர்.
சுதந்திரத்திற்காக உடல் பொருள்
ஆவி அத்தனையும் நாட்டுக்கு
அற்பணித்த அருந்தவ புரட்சியாளன் இந்த பொதுவுடைமை போராளி.
ஆவி அத்தனையும் நாட்டுக்கு
அற்பணித்த அருந்தவ புரட்சியாளன் இந்த பொதுவுடைமை போராளி.
இந்திய மாக்சிய அறிஞர்களில்
முக்கியமான பேரறிஞரான இவர், மார்க்சியத்தைப் பற்றி பலநூறு புத்தகங்களை நமக்கு கொடையாக தந்தவர்.
முக்கியமான பேரறிஞரான இவர், மார்க்சியத்தைப் பற்றி பலநூறு புத்தகங்களை நமக்கு கொடையாக தந்தவர்.
அவர் எழுதிய மார்க்சீய புத்தகங்கள் இல்லாத நூலகங்ளே உலகில் இல்லை என்றால் மிகையில்லை.
தனது சாதியைச் சார்ந்தவர்களும்
உறவினர்களும் அவரையும் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த
போதும், கட்சியை குடும்பமாக ஏற்றுக்கொப்டு கொண்டு மார்க்சீய பயணம் மேற் கொண்டவர்.
உறவினர்களும் அவரையும் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த
போதும், கட்சியை குடும்பமாக ஏற்றுக்கொப்டு கொண்டு மார்க்சீய பயணம் மேற் கொண்டவர்.
இரண்டு முறை கேரள முதல்வராக இருந்தும் தனது கோடிக்கணக்கான குடும்ப சொத்துக்களை கட்சிக்கு
கொடுத்து, கட்சி கொடுத்த வீட்டிலும், கட்சியின் மாத அலவன்சிலும்
இறுதி வரை வாழ்ந்து காட்டியவர்.
கொடுத்து, கட்சி கொடுத்த வீட்டிலும், கட்சியின் மாத அலவன்சிலும்
இறுதி வரை வாழ்ந்து காட்டியவர்.
இவருடைய மரணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன் தனது சொத்தைப்பல்லை பிடுங்க அரசு மருத்துவமனையில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று
சிகிச்சை எடுத்தார்.
சிகிச்சை எடுத்தார்.
ஈ எம் எஸ் ஸை பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன், இன்னும்கூட நிறைய எழுதலாம். என் தந்தையோடு ஒருமுறை திருவனந்தபுரத்தில் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.
இன்று தோழர் ஈ எம் எஸ் பிறந்த நாள். இவருடைய இரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
1. வேதங்களின் நாடு
2. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு
2. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு
முடிந்தால் வாசியுங்கள்.
தோழமையுடன்
Fazil Freeman Ali
Fazil Freeman Ali
கருத்துரையிடுக