உலகத்தின் கவனத்தை ஈர்த்த கோவை கட்டை வண்டி முற்றுகைப் போராட்டம்!
உலகத்தின் கவனத்தை ஈர்த்த கோவை கட்டை வண்டி முற்றுகைப் போராட்டம்!***********************************************
.ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில்
திமுக ஆட்சி 1967 ல் அமைந்ததற்குப் பின்
அமைக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் பெயர்
"கோவை ஜில்லா விவசாயிகள் சங்கம்"
இந்தச் சங்கமே பின்னர் தமிழக விவசாயிகள் சங்கமாக நாராயணசாமி நாயுடு அவர்களைத் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது.
கோவை ஜில்லா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழையகோட்டை பட்டக்காரரும் முன்னாள் அமைச்சருமான
நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டக்காரர் தலைவராக இருந்தாலும் சாதாரண விவசாயிகள் போர்க்குணத்தோடு சங்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.
பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களின் களமாக கோவை, திருப்பூர் இருந்த காலம் அது.
தொழிலாளர்களின் போராட்டம் விவசாயிகள் நடுவிலும் போராட்ட உணர்வை உருவாக்கியது.
கோவைப் பகுதி மிக ஆழமான கிணறுகள் நிறைந்த பகுதி.பல கிணறுகளில் ஒன்றன் கீழ் ஒன்றாக இரண்டு மோட்டார் பம்செட்கள் வைத்து ஆழத்திலிருந்து தண்ணீரை இறைத்து பாசனம் செய்து வந்தனர்.
பசுமை புரட்சி அறிமுகம் செய்து வீரிய வித்துக்களும் இராசயன உரங்களும் அறிமுகமாகி விவசாயிகள் பயன்படுத்த
வேளாண்துறையால் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
மின் இணைப்புகள் பசுமைப் புரட்சியை நடைமுறைப் படுத்த வேகமாக கொடுகப்பட்டன.
பணப்பயிர்களும்,உணவுப் பயிர்களும்
மின்மோட்டார்கள் மூலம் நீர் பாசனம் செய்து விளைவிக்கப்பட்டன.
கூட்டுறவு வங்கிகள் மூலமும், நிலவள வங்கிகள் மூலமும் கிணறு வெட்ட,மின்மோட்டார் வைக்க, கடன்கள் கொடுக்கப்பட்டது.
இவைகளைப் பயன்படுத்தி நவீன விவசாயத்ததில் உழவர்கள் நுழைந்தனர்.
" நல் விதை,நல்உரம், நற்காப்பு"
என பச்சை முக்கோணம் சுவர்களை அலங்கரித்தன.
இந்த மூன்றையும் சொன்ன அரசு "நல்விலை" என்று சொல்லவில்லை.
பசுமைப் புரட்சிக்குள் நுழைந்தவுடன் விவசாயிகள் பெரும் கடன் சுமையில் அகப்பட்டுக் கொண்டனர்.
இந்தச் சூழலில்தான் ஒரு யூனிட்டிற்கு
எட்டு (8)பைசா என்று இருந்த மின் கட்டணத்தை பத்து (10) பைசா என தமிழக அரசு உயர்த்தியது.இது விவசாயிகளைக் கோபம் கொள்ளச் செய்தது.
கூட்டுறவு வங்கிக் கடனுக்கு ஜப்தி செய்து விவசாயிகள் அவமானப் படுத்தப்பட்டனர்.
பசுமைப் புரட்சி உற்பத்தியைப் பெருக்கியது !
விவசாயிகளைக் கடனாளியாக்கியது!
.
எனவே அரசிற்கு எதிராக விவசாயிகள் சங்கமாகத் திரண்டு போராட முன் வந்தனர்.

மின்கட்டண உயர்வை எதிர்த்து நடந்த மாபெரும் கிளர்ச்சியில் பெருமா நல்லூரில் 1970 ல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு மூன்றுபேர் வீரச்சாவடைந்தனர்.
கொதித்தெழுந்த கோவை வட்டார விவசாயிகள் கட்டை மாட்டு வண்டிகளை நூற்றுக்கணக்கில் ஓட்டி வந்து கோவை நகரை முற்றுகையிட்டு முடக்கினார்கள்.
இரண்டு நாட்கள் நீடித்த போராட்டம் அன்றைய திமுக அரசை ஆட்டங்காண வைத்தது.
பல்லாயிரம் விவசாயிகள் மறியல் செய்து தண்டிக்கப்பட்டு கோவைச் சிறையை நிரப்பி இருந்தனர்.
கோவைக் கட்டை வண்டிப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர சிறையிலிருந்த தலைவர்களை சென்னைக்கு வரவழைத்தார் முதல்வர் கருணாநிதி.நல்லெண்ண அடிப்படையில் கட்டை வண்டிகள் பூட்டப் பட்டு ஊர் திரும்பியது.
.அந்தக் காலகட்ட போராட்டக் காட்சியை இந்த வண்டி முற்றுகைப் படம் சொல்கிறது.
எங்கள் கிராமமான பசுவபட்டி
நிறுவனத்தலைவர்களில் ஒருவரான கே.சின்னுசாமிக்கவுண்டரின் சொந்த ஊர்.
20 ஆண்டுகள் சென்னிமலை ஒன்றியப் பெருந்தலைவராக இருந்து வந்தவர்.அப்போதும் தலைவராக இருந்தார்.
மறியல் போராட்டத்திற்கு பாதி ஊரே அவரோடு கோவைச் சிறைக்குச் சென்றது.

மீண்டும் வரலாறு திரும்புகிறது!
உழவர்களின் மின்சார உரிமையைப் பறித்து
கார்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் சட்டத்தை மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
இரத்தம் சிந்தி நமது மூத்த தலைமுறை பெற்றுக்கொடுத்த மின்சார உரிமையை காப்பதா, இழப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
கொதித்தெழுவோம் உழவர்களே!
காத்திடுவோம் மின் உரிமையை!

பதிவர் -
கி.வே. பொன்னையன்
கருத்துரையிடுக