இனி ரௌத்ரம் பழகுவதற்கு இல்லை!
இனி ரௌத்ரம்
பழகுவதற்கு
இல்லை!
பழகுவதற்கு
இல்லை!
ம்.. புறப்படு!
இதே..
கொந்தளிக்கும் கோபம்
கொப்பளிக்கும் ஆத்திரம்
துளைக்கும் கேள்விகள்
பொசுக்கும் கண்களுடன்
வீறு கொண்டு புறப்படு!
கொந்தளிக்கும் கோபம்
கொப்பளிக்கும் ஆத்திரம்
துளைக்கும் கேள்விகள்
பொசுக்கும் கண்களுடன்
வீறு கொண்டு புறப்படு!
வல்லரசின்
செவிப்பறை கிழிய..
உயிர்கள் துடிக்க..
உணர்வுகள் வெடிக்க..
ஜார்ஜ் செய்த பாவம்
என்ன என்று கேள்!
செவிப்பறை கிழிய..
உயிர்கள் துடிக்க..
உணர்வுகள் வெடிக்க..
ஜார்ஜ் செய்த பாவம்
என்ன என்று கேள்!
"மூச்சு திணறுது" என்ற
ஹீனமான முனகல்
அந்த ஈனப்பிறவி காதில்
விழவில்லையா என கேள்!
ஹீனமான முனகல்
அந்த ஈனப்பிறவி காதில்
விழவில்லையா என கேள்!
சதையின்
அறுவடைகளில்தான்
வல்லரசுகளின்
வீரமா என கேள்
அறுவடைகளில்தான்
வல்லரசுகளின்
வீரமா என கேள்
கேள்விகள் கேட்க கேட்க
பொருளாதார கோட்டை
சடசடவென
சரிந்து விழட்டும்
பொருளாதார கோட்டை
சடசடவென
சரிந்து விழட்டும்
இழைத்த பாவங்களுக்கு
பிராயச்சித்தம்
உன்னால்
கிடைக்கட்டும்
பிராயச்சித்தம்
உன்னால்
கிடைக்கட்டும்
தளராதே..
ஆசானாக மார்ட்டின்..
வழிகாட்டியாக ஒபாமா..
தூண் - துணையாக
முப்பாட்டன் லிங்கன்!
ஆசானாக மார்ட்டின்..
வழிகாட்டியாக ஒபாமா..
தூண் - துணையாக
முப்பாட்டன் லிங்கன்!
"வெள்ளை" மாளிகை
பெயரையே வரலாற்றில்
மாற்றி எழுதிவிட்டு வா!
பெயரையே வரலாற்றில்
மாற்றி எழுதிவிட்டு வா!
என் உலக அழகியே..
வெண்கிரீடத்தில் ஒளிரும்
கறுப்பு வைரம் நீ!
வெண்கிரீடத்தில் ஒளிரும்
கறுப்பு வைரம் நீ!
தேவதைகள் பிறப்பதில்லை
பிறப்பவர்கள் எல்லாம்
தேவதைகள் ஆவதில்லை
ஆனால் என் தேவதைகளின்
தேவதை நீ தான்!
பிறப்பவர்கள் எல்லாம்
தேவதைகள் ஆவதில்லை
ஆனால் என் தேவதைகளின்
தேவதை நீ தான்!
அந்த வெள்ளை பூமியில்
கருத்த பூவாய்
புழுதி கிளப்பி அதிர புறப்படு!
கருத்த பூவாய்
புழுதி கிளப்பி அதிர புறப்படு!
- ஹேம வந்தனா
கருத்துரையிடுக