பார்ப்பனியம் தொடர்ந்து தனக்கான பணுவல்களை உற்பத்தி செய்து கொள்கிறது.

பார்ப்பனியம் தொடர்ந்து தனக்கான பணுவல்களை உற்பத்தி செய்து கொள்கிறது. அது ஓர் தொடர்ச்சியான செயல்பாடு. அவர்களின் புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள்அனைத்தும் அவ்வாறு உருவானவையே.
எடுத்துக்காட்டாக மகாபாரதம் சொல்லலாம். வியாசர் எழுதிய நூல் சில நூறு பக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு பின் பல்வேறு மக்களால் பல்வேறு காலங்களில் அது விரிவு செய்யப்படுகிறது.
பகவத் கீதை குப்தர்கள் காலத்தில் இயற்றப்பட்டு மகாபாரத்ததோடு இணைக்கப்படுகிறது. மேலும் பாரதம் ஒன்றல்ல பல உண்டு என்பதற்கு ஆதாரம் தான் ஜைனர்களின் பாரதம்.
ரிஷப தேவர் துவாரகையில் கண்ணனோடு இருந்தார் பின் அருக மதம் மாறினார் போன்ற கதைகள் அங்குண்டு.
இதில் விடுபட்ட ஒரு விஷயம் உண்டு. இந்த மகாபாரதம் எதிலும் சிந்துவெளிநாகரிகம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை.
ஏன் இல்லை ? ஏனென்றால் ஆங்கிலேயர் வரும் வரை சிந்துவெளி நாகரிகம் பற்றிய எந்த தகவலும் அங்கிருந்த மக்களிடம் இல்லை.
ஆக பார்ப்பனர்கள் கொண்டாடும் வேதம் இதிகாசம் எல்லாம் சிந்துவெளி நாகரிகத்திற்கு பிற்பட்டது மேலும் அந்நாகரிகம் அழிந்த பின்போ அல்லது அழியும் தருவாயிலோ தான் ஆரியர்கள்இங்கு வருகிறார்கள்.
இப்போது பார்ப்பனியம் தன் பனுவலை update செய்கிறது. சிந்துவெளி பற்றிய குறிப்புகளை பாரத கதையில் புகுத்த தொடங்குகிறது.
தமிழில் இதை செய்வது ஜெய மோகன். பீஷ்மர் சிதிலமடைந்த ஹரப்பா முன்னாள் நின்று கண்ணீர் சிந்துவதாக சில பத்திகள் வெண்முரசில் வருகிறது. இது காலப்போக்கில் உண்மையாக்க படும்.
இப்படி தான் இந்தியாவின் அனைத்து நிகழ்வுகள் ஒட்டியும் ஒரு பார்ப்பனிய கதை உருவாக்க படுகிறது.
பார்ப்பனர் இதை நிறுத்தப்போவதில்லை. பெரியாரிய மரபில் வந்த நாமும் இந்த பாரத கட்டுக்கதைகளை உடைப்பதை நிறுத்தப்போவதில்லை.