முகமத் அலி - பெயரல்ல வினைச்சொல்

முகமத் அலி
ஒரு குத்துச்சண்டை வீரர் என்கிற நிலையில் அவருக்கு மாற்று யாருமே இல்லையென்று உலகமே கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில் தான்
வியட்நாம் போரில் ராணுவ சேவை செய்யும் படி அமெரிக்க அரசின் நிர்பந்த்த்தை மறுக்கிறார்.
எதற்காக என்னை uniform போட்டு கொண்டு 10000 மைல்கள் தாண்டி வியட்நாமுக்கு போயி அப்பாவி மக்கள் மீது போர் புரிய சொல்கிறார்கள். இதே வெள்ளை அமெரிக்கர்கள் தான் லூயிஸ்வில்லில் அடிப்படையான மனித உரிமைகளை கூட மறுத்து கறுப்பின மக்களை நாய்களை விட மோசமாக நடத்துகிறார்கள். உலகெங்கும் இவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அப்பாவி மக்களை கொலை செய்வதற்கு உதவி புரிய நான் போக விரும்பவில்லை. எந்த வியட்நாம் மக்களும் என்னை நீக்ரோ என்று அவமதிக்கவில்லை. அப்படிப்பட்ட மக்களுக்கெதிராக நான் ஏன் இவரகளை ஆதரித்து போர் புரிய வேண்டும் என்று ஒரு மனிதாபிமான அடிப்படையிலான விளக்கத்தை கொடுத்தவர் முகமத் அலி .
இராணுவச் சேவை செய்ய மறுத்ததின் விளைவாக சிறை வாசம் அனுபவித்தார். குத்துச்சண்டை போட்டிகளில் தடை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
1980 ல் summer Olympics போட்டிகளுக்கு பயிற்சி செய்ய முகமத் அலி சோவியத் யூனியன் செல்கிறார். பயிற்சிகள் முடித்து நாடு திரும்பும் முன் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரெஷ்னேவை சந்திக்கிறார். தன் வாழ்க்கையில் பெற்ற ஆகச் சிறந்த பரிசாக ப்ரெஷனே கொடுத்த புத்தகத்தை குறிப்பிடுகிறார். அவருடனான சந்திப்பிற்கு பின் பத்திரிக்கைகளை சந்தித்து பேசிய அலி, "
அமெரிக்காவை தாக்க காத்திருக்கும் தீவிரவாதிகள் தான் சோவியத் யூனியன் என்று தான் இத்தனை நாளாக நினைத்திருந்தேன். என்னுடைய நினைப்பு தவறு இன்று இப்போது உணர்கிறேன்" என்று கூறுகிறார். சோவியத் யூனியன் பற்றிய கருத்து கேட்டதற்கு அவரின் பதில் குறிப்பிடத்தக்கது.
"சோவியத் தெருக்களில் வழிப்பறி செய்பவர் ஒருத்தரை கூட நான் பார்க்கவில்லை. பிச்சை எடுப்பவர்களையும் பார்க்க முடியவில்லை. அந்த தெருவுகளில் நான் உணர்ந்த பாதுகாப்பை வேறு எங்கும் அது வரை உணரவில்லை. எங்கள் நாட்டில் கேலி செய்யப்படுவோம் என்கிற எண்ணமே எழவில்லை. கிறித்தவர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் யூதர்களுக்கும் வழிபடும் சுதந்திரம் இல்லை என்று கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் அதெல்லாம் அப்பட்டமான பொய் என்பதை இந்த பயணம் எனக்கு சொல்லி தந்திருக்கிறது."
சோவியத் யூனியன் பிளவு பட்டதற்கு பிறகு 1996 லும் 1998 லும் கியூபா பயணத்தை மேற்கொண்டார் அலி. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கியூபாவுக்கு வழங்கினார்.
சோசலித்தின் மீதான கறுப்பின மக்களின் ஈர்ப்பை முகமத் அலி வெளிப்படுத்தி வந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த உதவிகளை புரிந்து கொள்ளலாம்.
முகமத் அலியுடனான குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலகியதை பற்றி கியூபாவின் குத்துச்சண்டை ஒலிம்பிக் சாம்பியன் தியோஃபிலோ கொடுத்த விளக்கம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.
"என்னுடைய புரட்சிகரமான நண்பன் அலி. அவரை அடிக்க எனக்கு விருப்பம் இல்லை."
பணத்துக்கும் புகழுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை அலியிடம் கண்டிருக்கிறார் தியோஃபிலோ.
அது மனிதாபிமானம்.
பகிர்வு - தோழர் சே.மணிகண்டன்