நிறவெறி போராட்டங்களின் பின்புலம்


அமெரிக்காவில் ஐரோப்பாவில் ஆஸ்திரேலியாவில் நிறவெறிஎதிர்ப்புபோராட்டங்கள் நடக்கின்றன. இவை நிறவெறிக்கு மட்டுமே எதிரானவை அல்ல. முதலாளிய சமூக அமைப்புக்கு எதிரானது.
நிறவெறியை முன்வைத்து போராட்டங்கள் நாடு தேசம் கண்டம் கடந்து எப்படி சாத்தியமாயின?
ஏகாதிபத்திய நாடுகள் உலகை சுரண்டியதன் ஒரு பகுதியை தன் நாட்டு தொழிலாளிக்கு கூடுதல் சம்பளமாக சலுகையாக மானியமாக அளித்தனர். இவர்கள் சமூக வாழ்வில் தொழிலாளி வர்க்கத்தினரை புரட்சிகரமற்ற உடைமை சிந்தனை உள்ளவர்களாக வளர்த்தெடுத்தது. இவர்களை நமது ஆசான்கள் #பிரபுக்குல_பாட்டாளி_வர்க்கத்தினர் என அழைத்தனர். இவ்வர்க்க தோற்றத்தின் தொடர்ச்சியாகவே இடதுசாரி இயக்கங்களில் சந்தர்ப்பவாத போக்கு வெளிப்பட்டது. இது முதன்மையாக பிரிட்டனில் வெளிப்பட்டது. மேலும் இப்போக்கு ஏகாதிபத்திய நாடுகளிலும் பரவலாக வெளிப்பட்டது. இதன் காரணமாக அந்நாடுகளில் இடதுசாரி இயக்கத்தில் வலது சந்தர்ப்பவாதம் வலுப்பட்டது. கூடவே இடது அதீதிவிரவாத அரசியல் போக்குகள் வெளிப்பட்டதை காண்கிறோம். சமூக மாற்றம் #சோசலிச_மாற்றம் சாத்தியமற்று போக வாய்ப்பளித்தது.
இந்தியா போன்ற நாடுகள் விடுதலைக்கு - 1947 அரசியல் மாற்றத்திற்கு பின்னர் அரசு துறை பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனங்களில் பணியாற்றிய நிரந்த தொழிலாளிகள் ஏகாதிபத்திய நாடுகளில் உருவான #பிரபுக்குல_பாட்டாளி_வர்க்கம்
போன்ற வர்க்க குணாம்சம் உடையவர்களாக அமைந்தனர். இவ்வர்க்க தோற்றத்தின்
தொடர்ச்சியாகவே பாராளுமன்ற வழி சமூக மாற்றம் என்ற #வலது_விலகல் போக்கும் வெளிப்பட்டது. அதே நேரத்தில் இதற்கு எதிரிடையாக #இடதுவிலகல் போக்கும் வலுப்பட்டது.
உலகமயம் 1990 களில் தொடங்கியது முதலே படிப்படியாக முதலாளி வர்க்கங்களின் சுரண்டல் அதிகரித்தது.
பெருஞ்செல்வம் சிலரின் கைகளில் குவிந்தது. பெரும்பான்மை மக்களின் கைகளில் வறுமையும் வேலையின்மையையும் வழங்கியது.
வரலாறு காணாத வகையில் #மீண்டழ_முடியாத #பொருளாதார_நெருக்கடியிலும்
#முதலாளியமே நீடிக்க முடியாது ( அதாவது மனித குல வளர்ச்சிக்கு பொருத்தமானது அல்ல - இதை மிகத் தெளிவாக காட்டுவதாக கொரோனா தொற்று பரவலால் பெரும்பான்மை மக்களை காக்க முதலாளிய அரசுகளால் முடியாது ) என்ற
நெருக்கடிக்குள் படிப்படியாக தள்ளியது. எனவே முதலாளிய அரசுகள் தொழிலாளி வர்க்கத்தினருக்கு - #பிரபுக்குல_பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்து வந்த கூடுதல் சம்பளம்
சலுகை மானியங்களை ரத்து செய்தன.
பிரபுக்குல பாட்டாளி வர்க்க அழிவு 2007 ,அமெரிக்க நிதி நெருக்கடியின் போது #வால்_ஸ்ரிட் போராட்டங்களாக வெளிப்பட்டது. அதே போல் தான் 2019ல் பிரான்சில் #மஞ்சள்_அங்கி போராட்டங்கள் வெளிப்பட்டது.
இன்றைய சூழல் மேலும் பொருளாதார நெருக்கடி ஆழப்பட்டது; கொரோனா நோய் பரவலும் அதிகப்படுத்துகிறது. இதன் வெளிப்பாடாகவே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தினர் தங்கள் வாழ்வாதாரம் காக்க வரலாறு காணாத அளவிற்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதை காணலாம். நிறவெறி எதிர்ப்பு போராட்டம் என்பது வெளிப்பாட்டு வடிவம். உண்மையில் இப்போராட்டங்கள் முதலாளிய ஒழிப்பு சோசலிச மாற்றத்தை முன்னெடுக்கும் போராட்டங்களுக்கான அடித்தளமே எனலாம்.