நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள் - நடிகை தப்சீ பண்ணு. - மொழிபெயர்ப்பு-ஞாட்பன் சிவா.

நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள்,
இந்நாட்டின் குடிமக்களா
சந்தேகமே..
நாங்கள் மனிதர்கள் இல்லை எனில்
கொன்று விடுங்கள்,
பிறப்பியுங்கள் உங்கள் ஆணையை,
சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை,
பசி மயக்கத்தின் போது
கிடைத்தன காவல்துறையில் அடிகள்,
கற்பனைக்கெட்டா தூரம் பயணித்தோம்,
சிலர் மிதி வண்டிகளில்,
பலர் வெறும் கால்களில்,
இறந்தனர்
பலர் பசியால் ,
பலர் வெப்பம் தாங்காமல்,
இருந்தாலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை,
தலைவர்களின் பொய் பிரச்சாரத்தால்,
பேருந்துகள் அனுப்பினர்,
ரயில்கள் விட்டனர்,
ஏனோ அவை
ஏழைகள் போகும் வழி மறந்தன,
உயிர்களை இழந்தோம்,
இங்கு சிலைகள் மதிப்பு மிக்கவை,
மனித உயிர்கள் மலிவானவை,
பெரும் கனவு,
நல்ல வாழ்வு மலரும்,
என முழங்கிய அவர்களால்,
எங்கள் பசியை போக்க முடியவில்லை,
எங்களுக்கு
பிச்சை வேண்டாம்,
தானம் வேண்டாம்,
எங்கள் தன்மானமாவது மிஞ்சட்டும்.
நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள்,
இந்நாட்டின் குடிமக்களா
சந்தேகமதான்...
மொழிபெயர்ப்பு-ஞாட்பன் சிவா.
நன்றி- குரல், ஆக்கம், நடிகை தப்சீ பண்ணு.