சானிடைசர் (Sanitizer) பற்றிய வேதியியல் விளக்கம் மற்றும் தயாரிப்பு முறை.
சானிடைசர் கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த பெயராகிவிட்டது.
கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது எனலாம்.
மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை தொட்டு பரிசோதனை செய்த பிறகு தங்கள் கைகளில் ஒரு மருந்தை தடவி கொள்வார்கள். இதுதான் சானிடைசர் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கிருமி நாசினி. இதை தடவி கொண்டாலே போதும். கைகளை கழுவ வேண்டிய அவசியம் இல்லை. இந்த சானிடைசர் கைகளில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாக்டீரியாக்களையும், வைரஸையும் அழித்துவிடும்.
வகைகள் :
ஆல்கஹால் மற்றும் நான் ஆல்கஹால் என்று இரண்டு வகைகள் இதில் இருக்கின்றன. இந்த சானிடைசர்கள் நுரை போன்றும், ஜெல் போன்ற நிலையிலும், திரவ வடிவத்திலும் தயாரிக்கப்படுகின்றன.

மூலப்பொருள் :
ஆல்கஹால் சானிடைசர் என்பது 65 சதவீத எத்தனால் மற்றும் 35 சதவீதம் ஐஸோ ப்ரொபைல் அடங்கியிருக்கிறது. ஆல்கஹால் அல்லாத சானிடைசரில் பென்சல் கோனியம் குளோரைடு (Benzalkonium Chlorid) மற்றும் ட்ரைக்ளோசன் (Triclosan) முக்கிய பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

குழந்தைகள் பயன்படுத்தலாமா : சானிடைசர் பயன்படுத்திய குழந்தைகளுக்கு கண் எரிச்சல், வாந்தி, வயிற்று வலி மற்றும் இருமல் வந்துள்ளது. ஏனென்றால், குழந்தைகள் சானிடைசர் பயன்படுத்திய உடனே கைகளை கண்களிலோ அல்லது வாயிலோ வைத்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது, அது முழுவதுமாக காய்ந்த பிறகு அவர்களை தனிமையில் விடுங்கள். முழுமையாக காய்வதற்குள் குழந்தைகள் கண் மற்றும் வாயில் கை வைப்பதால் மேலே கூறப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தயாரிக்கும் முறை :
ஆல்கஹால் பிரதான பொருள் என்றாலும் நீங்கள் எத்தனால் அல்லது ஐஸோப்ரொபைல் ஆல்கஹாலை தான் பயன்படுத்த வேண்டும். மெத்தனால், பியுட்டானால் ஆல்கஹால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 70 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் ஆல்கஹால் பயன்படுத்தும் போது அவை கிருமிகளை அழிக்க எந்த வகையிலும் உதவாது. அதனால் தான் 99% எத்தனால் பயன்படுத்த வேண்டும். ஜெல் போன்ற வடிவத்தில் தயாரிக்க விரும்புபவர்கள் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். தரமான கற்றாழை சாறை கடைகளில் வாங்கி கொள்ளுங்கள். சானிடைசர் தயாரிப்பின் போது மேலும் கிருமிகளை விரட்ட கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். இதை அதிக அளவு சேர்த்தால் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். அதனால இரண்டு அல்லது மூன்று துளிகளுக்கு மேல் இதை சேர்க்கவேண்டாம். வாசனைக்கு நறுமண எண்ணெயும் சேர்க்கலாம். இவை சருமத்தை பாதிப்புக்குள்ளாக்காது. அதோடு நறுமணமாகவும் இருக்கும். ஒரு அகலமான கிண்ணத்தில் 3 கப் எத்தனால் அல்லது ஐசோப்ரொபைல் ஆல்கஹால் சேர்த்துகொள்ளுங்கள். இதில் 3 கப் வீதத்துக்கு 1 கப் வீதம் கற்றாழை ஜெல்லை சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்குங்கள். பிறகு நறுமணத்துக்கு சேர்க்கப்படும் எண்ணெயையும் சேர்த்து நன்றாக கலக்கி பிறகு கண்ணாடி ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து பயன்படுத்துங்கள். சானிடைசர் தயாரிக்கும் போது எத்தனால் பெளலில் ஊற்றும் போது எச்சரிக்கையாக செயல்படுங்கள். அவை உங்கள் சருமத்தின் மீது படாமல் பார்த்துகொள்வது சருமம் எரிச்சல் ஆகாமல் பாதுகாக்கும்.சானிடைசரை எல்லா காலங்களிலும் எல்லாருமே பயன்படுத்தலாம் என்பதால் எப்போதும் இதை தயாரிக்கலாம். ஆனால் அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் இதை வைத்திருக்க வேண்டாம்.
பக்க விளைவுகள் : சானிடைசர் தயாரிப்பில் பயன்படுத்தும் பென்சல்கோனியம் குளோரைடு வீரியமிக்க பாக்டீரியாக்களையும் அழிக்கவல்லது. இது பூஞ்சைகளை கொல்லும் ஆற்றலை கொண்டது. விரல்களில் இருக்கும் கிருமிகளை விரட்டி அடிக்க இதை பயன்படுத்தலாம் ஆனால் உள்ளுக்குள் இவை போகாமல் பார்த்துகொள்ள வேண்டும். ஆல்கஹால் அல்லாத சானிடைசர் அதிகம் பயன்படுத்தும் போது அவை புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனை உருவாக்குகின்றன. அதனால் தான் ஆல்கஹால் இருக்கும் சானிடைசர் உபயோகிப்பது அதிக விளைவுகளை உண்டாக்காது என்கிறோம். எனினும் சானிடைசரை மட்டும் பயன்படுத்தினால் போதும். கைகளை கழுவ வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் சானிடைசர் உபயோகிக்கும் போது அவை கைகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகிறது. அதனால் சுத்தமான நீரை திருப்பி அதில் கைகளை சோப்பு போட்டு கழுவுவதே சிறந்தது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
ராஜேஷ் ராஜேந்திரன்
16.06.2020
முதுநிலை வேதியியல் ஆசிரியர்

கருத்துரையிடுக