இந்திய அரசே ! அவமானம் தமிழக போலீஸ் துறையை கலைத்து விடு !!

#1861-காவல் துறை சட்டம் இயற்றப்
பட்ட 159 "ஆண்டுக்கால வரலாற்றில்
வருவாய் துறையிடம் ஒரு காவல் நிலையம் ஒப்படைக்கப் பட்டது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை,
கேரளாவின் முன்னாள் #DGPசாஸ்தா*
மிகுந்த வேதனை !
இந்திய அரசே ! அவமானம் தமிழக போலீஸ் துறையை கலைத்து விடு !!
இந்தியாவின் 159 "ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு காவல் நிலையத்தை Revenue Department கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது சாத்தான்குளம் காவல் நிலையமாக
தான் இருக்கும்.
இது காவல் துறைக்கு மட்டும் மல்ல
தமிழக அரசிற்கும் இந்திய அரசிற்கும்
ஏற்பட்ட அவமானம். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை
சட்டத்தை மீறுகின்ற வகையில் நடந்து
கொண்டதே இதற்கு காரணம்.
லாக்கப் மரணத்தை பற்றி விசாரிக்க சென்ற மாண்புமிகு #மாஜிஸ்திரேட்டை சாதாரண போலீஸ்கார பயல் ஒருவன் மிரட்டுகிறான் என்றால். எந்த அளவிற்கு இங்கே சட்ட ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது என்பதற்கு சாத்தான்குளம் சம்பவமே தகுந்த சாட்சி.
நிர்வாக திறமையற்ற மணல் மாஃப்பியா
அதிமுக.வின் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி
எந்தளவிற்கு இங்கே நடக்கிறது என்பது
இதன் மூலம் தெள்ள தெளிவாகிறது .
தமிழகத்தின் முதல்வராக( police Department ) காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் பழனிசாமியே
இந்த லாக்கப் மரணத்திற்கு தார்மீக பொறுப்பாளி.
காவல் துறைக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு தைரியமும் துணிச்சலும்.
யார் இதற்கு பின்னால் இருந்து செயல்
படுகிறார்கள்.இவர்களை தூண்டிவிடும்
சமூக விரோதிகள் யார் ?
இவர்கள் செய்யும் அராஜமும் அக்கிரமங்களையும் ஆதரித்து பாதுகாப்பவர்கள் யார் ?
போலீஸ் மக்களை காக்கவா ? அல்லது
மக்களை கொல்லவா ?
காவல்துறையும், நீதிமன்றமும் அதன்
பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறதா ?
ஒரு நீதிபதிக்கே இங்கு மரியாதையும் பாதுகாப்பும் இல்லை ! என்கின்ற போது
சாதாரண மக்களின் நிலையோ பரிதாபம்.
அரசும் நீதித்துறையும் இனியாவது போலீசின் அராஜகத்திற்கு கடிவாளம் போடுவில்லை என்றால் கண்டிப்பாக மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தறிக்கெட்ட போலீஸ் ரவுடிகளுக்கு கடிவாளம் போடுவோம் !!